சிதறவிடும் 80W சவுண்ட்.. 15 மணிநேர பேட்டரி... Amazon-ல் ஆளுக்கு 1 வாங்கும் ஆபர் விலையில் புது boAt ஸ்பீக்கர்!
பார்ட்டி, டிராவல் மற்றும் வெளிப்புற பயன்பாட்டிற்காக சக்திவாய்ந்த சவுண்ட்டை விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டு, போட் நிறுவனம் இந்தியாவில் தனது போர்ட்டபிள் ஆடியோ சீரீஸின் கீழ் போட் ஸ்டோன் 900 (BoAt Stone 900) என்கிற புதிய ப்ளூடூத் ஸ்பீக்கரை (Bluetooth speaker) அறிமுகப்படுத்தி உள்ளது.
முக்கிய அம்சங்கள்: இந்த புதிய ஸ்பீக்கர் 80W ஆடியோ அவுட்புட்டை (80W audio output) வழங்குகிறது, டைனமிக் ஆர்ஜிபி லைட்டிங் (Dynamic RGB lighting) அம்சத்தையும் கொண்டுள்ளது மற்றும் ஒரே சார்ஜில் 15 மணிநேரம் வரை பிளேபேக்கை (15 hours of playback) என்றும் போட் நிறுவனம் கூறுகிறது.

விரிவான அம்சங்கள்: போட் ஸ்டோன் 900 ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது 80W போட் சிக்னேச்சர் சவுண்டை வழங்கும் டூயல் டிரைவர்கள் மற்றும் பிரத்யேக ட்வீட்டர்களுடன் வருகிறது. ம்யூசிக், மூவீஸ் மற்றும் கெட்டூகெதர்களுக்கு ஒரு சமநிலையான ஆடியோ அனுபவத்தை வழங்குவதற்காக இந்த ஸ்பீக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று போட் கூறுகிறது. பார்ட்டி அனுபவத்தை மேம்படுத்த, இந்த ஸ்பீக்கரில் இசையுடன் ஒத்திசைக்கும் டைனமிக் ஆர்ஜிபி லைட்டிங் உள்ளது.
இந்த ஸ்பீக்கர் நீர் மற்றும் வியர்வையை தாங்கும் திறனுக்காக IPX5 ரேட்டிங்கை கொண்டுள்ளது, ஆக இது நீச்சல் குளங்களுக்கு அருகில், உடற்பயிற்சியின் போது அல்லது பயணம் செய்யும் போது பயன்படுத்த ஏற்றதாக இருக்கும். இருப்பினும், இந்த ரேட்டிங் இதை முழுமையாக நீர்ப்புகாததாக ஆக்காது, எனவே பயனர்கள் இதை தண்ணீரில் மூழ்கடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஸ்டோன் 900 ஸ்பீக்கர் ஆனது வயர்லெஸ் இணைப்பிற்காக ப்ளூடூத் 5.3-ஐ ஆதரிக்கிறது. மேலும், இது AUX மற்றும் USB பிளேபேக்கையும் கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களை இணைப்பதற்கும் அல்லது யுஎஸ்பி டிரைவிலிருந்து நேரடியாக இசையை இயக்குவதற்கும் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இந்த ஸ்பீக்கர் 15 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்கும் என்று போட் நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், ஒலியின் அளவு, ஒளி விளைவுகள் மற்றும் பிளேபேக் சோர்ஸ்-ஐ (volume levels, lighting effects and playback source) பொறுத்து உண்மையான பேட்டரி லைஃப் மாறுபட வாய்ப்புள்ளது.
விலை மற்றும் விற்பனை: போட் ஸ்டோன் 900 ப்ளூடூத் ஸ்பீக்கரின் அசல் விலை ரூ.5,999 ஆகும், ஆனால் அமேசான் பிரைம் டே (Amazon Prime Day) சிறப்பு சலுகையின் கீழ் இது ரூ.4,999 க்கு வாங்க கிடைக்கும். வாடிக்கையாளர்கள் 'கிராஃபைட் பிளாக்' (Graphite Black) மற்றும் 'ஜங்கிள் டெர்ரெய்ன்' (Jungle Terrain) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் இதை வாங்கலாம். அமேசான் தவிர்த்து போட் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வலியுமாகவும் இது விற்பனைக்கு கிடைக்கும்.
தமிழ் கிஸ்பாட்டின் கருத்து: யாரெல்லாம் நம்பி வாங்கலாம்? அறிமுக விலையை கருத்தில் கொண்டால், நீர் எதிர்ப்பு திறன் (water resistance) மற்றும் நீண்ட பேட்டரி லைஃப் போன்ற அதே அம்சங்களை வழங்கும் ஜேபிஎல் (JBL), மிவி (Mivi) மற்றும் போர்ட்ரானிக்ஸ் (Portronics) போன்ற பிராண்டுகளின் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்களுடன் போட் ஸ்டான் 900 வெளிப்படையாகவே போட்டியிடுகிறது.
இந்த புதிய போட் ஸ்பீக்கரின் மிக முக்கியமான சிறப்பம்சம் இதன் 80W சவுண்ட் அவுட்புட் திறன் தான். இந்த விலைப்பிரிவில் இது அரிதான ஒன்றாகும். ஹோம் பார்ட்டிகள் அல்லது வெளிப்புற கூட்டங்களுக்கு அதிக சத்தத்தை விரும்பும் பயனர்களை இது கவரக்கூடும். அதிக ஆடியோ அவுட்புட் மற்றும் பல வகையான கனெக்டிவிட்டி வசதிகளை கொண்ட காம்பாக்ட் ஆன ஸ்பீக்கர் உங்களுக்குத் தேவைப்பட்டால், போட் ஸ்டோன் 900 ஒரு சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications