ஸ்மார்ட்வாட்ச் எதுக்கு?.. ரூ.2,999-க்கு ஹார்ட் ரேட், ஸ்லீப், எஸ்பிஓ2 மானிட்டர்.. கேமரா கன்ட்ரோல்.. எந்த மாடல்?
ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களுடன் ஸ்மார்ட் ரிங் மாடல்கள் களமிறங்க தொடங்கிவிட்டன. இருப்பினும், பட்ஜெட் அதிமாக இருக்கின்றன. ஆனால், போட் நிறுவனமானது, கம்மியான பட்ஜெட்டில் ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்ட்ரெஸ் லெவர் டிராக்கர், ஸ்கின் டெப்ம்ரேச்சர் டிராக்கர் மட்டுமல்லாமல், 5ATM ரெசிஸ்டன்ட், 30 நாட்கள் பேட்டரி போன்ற பீச்சர்களுடன் போட் ஸ்மார்ட்ரிங் ஆக்டிவ் பிளஸ் (boAt SmartRing Active Plus) மாடலை களமிறக்கி இருக்கிறது. இந்த போட் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விவரங்கள் இதோ.
போட் ஸ்மார்ட்ரிங் ஆக்டிவ் பிளஸ் அம்சங்கள் (boAt SmartRing Active Plus Specifications): பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள், டிராக்கர்கள் வருகிறது. ஆட்டோ எச்ஆர்வி - ஹார்ட் ரேட் வேரியஷன்ஸ் (Auto HRV - Heart Rate Variations), ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங் (Blood Oxygen Level Monitoring) வருகிறது.

மேலும், ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங் (Stress Level Monitoring) கிடைக்கிறது. இதுபோக ஸ்கின் டெம்ப்ரேச்சர் டிராக்கர் ( Skin Temperature Tracker) கிடைக்கிறது. இந்த டேட்டாக்களை போட் கிரெஸ்ட் ஆப் (boAt Crest App) மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த கிரெஸ்ட் ஆப் மூலம் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிகளையும் செய்து கொள்ளலாம்.
ஆகவே, வாக்கிங், ரோம் ஸ்கிப்பிங், ஸ்விம்மிங், ரன்னிங் மற்றும் ஹைக்கிங் போன்ற மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட் டிராக்கிங் (Multiple Sports Mode Tracking) கிடைக்கிறது. ஸ்விம்மிங் ஆக்டிவிட்டி கிடைப்பதால், 5ATM ரேட்டிங் கொண்ட டஸ்ட், ஸ்பிளாஷ் & ஸ்வெட்ரெசிஸ்டன்ட் (Dust, Splash & Sweat Resistant) ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) பாடி கிடைக்கிறது.
ஆகவே, டியூரபிலிட்டி எதிர்பார்க்கலாம். கேமரா கன்ட்ரோல் கிடைக்கிறது. ஷேக் & டேக் (Shake & Take) கெஸ்ச்சர் மூலம் கேமரா கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். இந்த போட் ஸ்மார்ட்ரிங் ஆக்டிவ் பிளஸ் மாடலுக்கு மேக்னட்டிக் சார்ஜிங் கேஸ் (Magnetic Charging Case) கிடைக்கிறது. இந்த கேஸ் சார்ஜிங் மூலம் 30 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
அதேபோல சிங்கிள் சார்ஜிஸ் 5 நாட்களுக்கு ஸ்மார்ட்ரிங்கில் பேக்கப் பெற்று கொள்ளலாம். வெறும் 4.7 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆகவே, லைட் வெயிட்டில் காம்பார்ட் ஃபீல் கொடுக்கும். இந்த போட் ஸ்மார்ட்ரிங் ஆக்டிவ் பிளஸ் மாடலில் பிளாக் (Black), ரோஸ் கோல்டு (Rose Gold) மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
7 சைஸ்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதில் 7 சைஸ் (52 - 55 மிமீ), 8 சைஸ் (56 - 59 மிமீ), 9 சைஸ் (60 - 62 மிமீ), 10 சைஸ் (63 - 66 மிமீ) மற்றும் 11 சைஸ் (67 - 70 மிமீ) ஆகிய சைஸ்கள் இருக்கிறது. 12 சைஸ் (71 - 74 மிமீ) அடங்கும். இதில் உங்களுக்கான சைஸ் தேர்ந்தெடுக்க போட் நிறுவனத்தின் வெப்சைட்டில் சைஸ் சார்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
போட் ஸ்மார்ட்ரிங் ஆக்டிவ் பிளஸ் விலை (boAt SmartRing Active Plus Price): மேற்கண்ட பீச்சர்களுடன் ரூ.2,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல போட் வெப்சைட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் ஹெல்ட் மானிட்டரிங் பீச்சர்கள் வேண்டுமானால், இது பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications