Home
Gadgets

ஜூலை 20 ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.2999 போதும்.. ஹெல்த் மானிட்டர்.. வாட்டர் ரெசிஸ்டன்ட்.. boAt ரிங் ரெடி..

போட் நிறுவனம் தனது புதிய போட் ஸ்மார்ட் ரிங் (boAt Smart Ring Active) ஆக்டிவ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட் ரிங் ஆனது வரும் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிங் ஆனது தனித்துவமான வடிவமைப்புடன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் அம்சங்கள் (boAt Smart Ring Active Specification): முக்கிய ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Levels Monitor) போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஜூலை 20 ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.2999 போதும்.. boAt ரிங் ரெடி..

காற்று புகாத தொழில்நுட்பம் மற்றும் துருப்பிடிக்காத எஃகு மூலம் இந்த ஸ்மார்ட் ரிங் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாட்டர் ரெசிஸ்டன்ட் (water resistance) ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போட் ஸ்மாரட் ரிங். சில்வர் பிளாக், கோல்ட் என மூன்று நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் விற்பனைக்கு வரும்.

பல்வேறு பயனர்களுக்கு ஏற்றபடி ஐந்து அளவுகளில் போட் ஸ்மாரட் ரிங் வெளிவரும். அதேபோல் இதில் ஸ்மார்ட் ஆக்டிவிட்டி டிராக்கிங் (Smart Activity Tracking) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்கிங், ரன்னிங், ரைடிங் போன்ற ஆக்டிவிட்டிகளை டிராக்கிங் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் கூறுகிறது.

குறிப்பாக ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் (Smart Toch Control) ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடல். குறிப்பாக இதன் உதவியுடன் மியூசிக் கன்ட்ரோல் மற்றும் கேமரா கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்ரிங்குடன் கனெக்ட் செய்ப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனில் பிளே/பாஸ் மியூசிக் (Play/Pause Music), சேஞ்ஜிங் டிராக்ஸ் (Change Tracks), கிளிக் பிக்சர்ஸ் (Click Pictures), நேவிகேட் அப்ளிகேஷன் (Navigate Applications) உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடல் இந்தியாவில் ரூ.2999 விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் முன்பதிவு அமேசான், பிளிப்கார்ட், போட் இணையதளங்களில் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வரும் ஜூலை 20 ஆம் தேதி போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் விற்பனை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.2999 போதும்.. boAt ரிங் ரெடி..

அதேபோல் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) மாடலை அறிமுகம் செய்தது. 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் ரிங். மேலும் 5 முதல் 13 சைஸ் அளவுகளில் இந்த சாதனத்தை வாங்க முடியும். இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சாம்சங் ரிங் உடன் ஒளிரும் எல்இடி லைட்களுடன் (LED Lights) கூடிய சார்ஜிங் கேஸ் இதனுடன் வருகிறது. மூவ்மண்ட் ( movement), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), சுவாச விகிதம் உள்ளிட்ட பல்வேறு சென்சார் மானிட்டர் அம்சங்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட் ரிங் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த சாம்சங் சாதனத்தின் விலை ரூ.33,404-ஆக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வரும் ஜூலை 24-ம் தேதி இதன் விற்பனை தொடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BOAt Smart Ring Active will be launched in India on July 20: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X