Home
Gadgets

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ஹார்ட் ரேட் மானிட்டர்.. 5ATM ரெசிஸ்டன்ட்.. 5 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் (boAt Smart Ring Active) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஹெல்த் மானிட்டர்கள், 5 நாள் பேட்டரி பேக்கப், டச் கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் வெளிவந்துள்ளது. இப்போது போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் அம்சங்கள் (boAt Smart Ring Active Specification): மேக்னடிக் சார்ஜிங் கேஸ் உடன் இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ரிங் மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும். எனவே இந்த ஸ்மார்ட் ரிங் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. 5 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

20க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிங் மாடல். மேலும் ஸ்மார்ட்வாட்ச் போன்றே இந்த ஸ்மார்ட் ரிங்கில் ஒருவரது உடல் செயல்பாடு, ஆரோக்கியம், இதயத்துடிப்பு மற்றும் வெப்பநிலை போன்றவற்றைக் கண்காணிக்கும் சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த சென்சார் மூலம் பெறப்படும் தரவுகளைப் பெற, ஸ்மார்ட் ரிங்கை ப்ளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைத்து காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), ஸ்ட்ரெஸ் ட்ராக்கிங் (stress tracking), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), போன்ற முக்கியமான ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) உடன் இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடல் வெளிவந்துள்ளது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. 5 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் உடன் வெளிவந்துள்ளது போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடல். அதேபோல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது துருப்பிடிக்காது, அதேசமயம் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது.

ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் (Smart Toch Control) ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடல். குறிப்பாக இதன் உதவியுடன் மியூசிக் கன்ட்ரோல் மற்றும் கேமரா கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்ரிங்குடன் கனெக்ட் செய்ப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனில் பிளே/பாஸ் மியூசிக் (Play/Pause Music), கிளிக் பிக்சர்ஸ் (Click Pictures), உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ள முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. 5 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

மேலும் இந்த புதிய போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மூன்று நிறங்களிலும் 6 அளவுகளிலும் கிடைக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 முதல் 12 அளவுகளில் இதை வாங்க முடியும். பின்பு மிட்நைட் பிளாக் (Midnight Black), ரேடியன்ட் சில்வர் (Radiant Silver) மற்றும் கோல்ட் (Gold) நிறங்களில் விற்பனைக்கு வருகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட ரிங்.

குறிப்பாக பிளிப்கார்ட், அமேசான் மற்றும் போட் இணையதளத்தில் இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடலை வாங்க முடியும். மேலும் இந்த சானத்தின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Smart Ring Active Launched in India: check specifications, price, colors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X