Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. GPS டிராக்கிங்.. வீடியோ காலிங்.. SOS அலெர்ட்.. புது கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

வீட்டில் இருக்கும் கிட்ஸ்களுக்கு ஏற்ற பீச்சர்களுடன் போட் செய்லர் நேவ் 4ஜி (boAt Sailor Nav 4G) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை கையில் கட்டியிருந்தால் போதும், ஜிபிஎஸ் வழியாக டிராக் செய்து கொள்ளலாம். வீடியோ காலில் நேரடியாக பேசி கொள்ளலாம். இப்படி பல்வேறு பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த போட் செய்லர் நேவ் 4ஜி மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

இந்தியாவில் போட் நிறுவனம் என்றாலே, ஹெட்போன், இயர்பட்ஸ் மற்றும் ஸ்பீக்கர்களே முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குழந்தைகளுக்கு தேவையான பீச்சர்களுடன் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் களமிறக்கி வருகிறது. இந்த வரிசையில் போட் செய்லர் நேவ் 4ஜி மாடலானது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. GPS டிராக்கிங்.. வீடியோ காலிங்.. SOS அலெர்ட்!

கிட்ஸ்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க விரும்பும் பெற்றோர்களுக்கு இது பக்காவான ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், நினைக்கும்போது வீடியோ காலில் பேசி கொள்ளலாம். லைவ்வாக டிராக் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட பெரிமீட்டரை செட் செய்து கொள்ளலாம். இந்த பெரிமீட்டரை விட்ட தூரமாக சென்றால், அலெர்ட் பெற்று கொள்ளவும் முடியும்.

போட் செய்லர் நேவ் 4ஜி அம்சங்கள் (boAt Sailor Nav 4G Specifications): இது கிட்ஸ்களுக்கான மாடலாக இருப்பதால், அதற்கு தேவையான பீச்சர்களை மட்டுமே கொடுக்கிறது. 1.44 இன்ச் எச்டி டச் டிஸ்பிளே கிடைக்கிறது. 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, சிம் கார்டு சிலாட் கொடுக்கப்படும். இதை வைத்து எப்போதும் தொடர்பில் இருக்க முடியும்.

ரியல் டைம் ஜிபிஎஸ் டிராக்கிங் (Real-time GPS Tracking) கிடைக்கிறது. கூகுள் மேப் வழியாகவும் டிராக் செய்து கொள்ள முடியும். இதுபோக தற்போதைய லோகேஷன் (Current Location), கடைசியாக பதிவு செய்யப்பட்ட லோகேஷன் (Last Recorded Location) உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், பேட்டரி லெவல் (Battery Level), லோகேஷன் ஹிஸ்டரி (Location History) தெரிந்து கொள்ளலாம்.

இதை பெற்றோர்களே கவனிக்க முடியும். ஆகவே, பேட்டரி லெவல் குறைவாக இருந்தால், முன்கூட்டியே சார்ஜ் செய்ய வசதியாக இருக்கும். டூ-வே வீடியோ கால்களை (Two-way Video) செய்து கொள்ள முடியும். இதற்காக 2 எம்பி கேமராவை இந்த போட் செய்லர் நேவ் 4ஜி ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. வாய்ஸ் கால்களையும் (Voice Calls) செய்து கொள்ளலாம். ரிமோட் போட்டோ கேப்ச்சர் (Remote Photo Capture) கிடைக்கிறது.

ஜியோ-பென்சிங் (Geo-fencing) கிடைக்கிறது. ஆகவே, குறிப்பிட்ட இடத்தில் இருந்த தூரமாக சென்றால் பெற்றோருக்கு அலெர்ட் வந்துவிடும். சேப் சோன் அலெர்ட் (Safe Zone Alerts) கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்ஓஎஸ் (SOS) கிடைக்கிறது. இதை போட் செய்லர் ஆப் (boAt Sailor App) வழியாக கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். கிளாஸ் மோட் (Class Mode), ஸ்ட்ரேஞ்சர் கால் புரொடெக்சன் (Stranger Call Protection) உள்ளது.

ஆகவே, வேறு யாரும் கிட்ஸ்களுக்கு கால் செய்வதை தடுக்க முடியும். வீடியோ சாட் டிசேபிள் (Video Chat Disable) இருக்கிறது. டயல் பேட் டிசேபிள் (Dial Pad Disable) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. ஹெல்த் பீச்சர்களை பார்க்கையில், டெய்லி ஸ்டெப் கவுன்டர் (Daily Step Counter) மட்டுமே கிடைக்கிறது. அலாரம், கால்குலேட்டர், ஸ்டாப்வாட்ச் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன.

ஆஃப்லைன் கேம்களும் உள்ளன. 600mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் ஃபேரி பிங்க் (Fairy Pink) கலர்களில் கிடைக்கிறது. இந்த போட் செய்லர் நேவ் 4ஜி மாடலின் விலை ரூ.6,499 ஆக இருக்கிறது. அமேசான் மற்றும் போட் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 1 வருட வாரண்டியுடன் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
boAt Sailor Nav 4G Kids Smartwatch with GPS Tracking Video Calling Launched Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X