40 மணிநேர ஆயுள்: அட்டகாச BoAt வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்!

|

BoAt ஆடியோ பிராண்ட் நிறுவனம் Rockerz 255 Pro+ வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்கள் டீல் கிரீன், நேவி ப்ளூ மற்றும் ஆக்டிவ் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் பிப்ரவரி 12 முதல் ரூ.1,499 என்ற விலையில் கிடைக்கிறது.

40 மணிநேர ஆயுள்: அட்டகாச BoAt வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்!

BoAt Rockerz 255 Pro+ சாதனம் 3000 எம்ஏஎச் பேட்டரி, இது 40 மணிநேர பிளேபேக் அல்லது குரலழைப்பை வழங்குகிறது. இது வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் பிளேபேக் வசதியை வழங்குகிறது.

BoAt Rockerz 255 Pro+ அதிவேக ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. ஆடியோ டிகோடரை இந்த சாதனம் கொண்டுள்ளது, மேலும் நீர், வியர்வை எதிர்ப்புக்காக ஐபிஎக்ஸ்7 மதிப்பீட்டை வழங்குகிறது.

BoAt Rockerz 255 Pro+ ப்ளூடூத் வி5.0 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் பின்புற கழுத்து வடிவமைப்பை கொண்டுள்ளது. நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் அசௌகரியமான உணர்வு இருக்காது என கூறப்படுகிறது. கூகுள் அசிஸ்டென்ட் பிரத்யேக பட்டன் இருக்கிறது. இதை அழுத்தி கிரிக்கெட் ஸ்கோர் உள்ளிட்டவற்றை கோரலாம்.

BoAt Rockerz 255 Pro+ குவால்காம் ஆப்டிஎக்ஸ், நாய்ஸ் ரத்து உள்ளிட்ட தொழில்நுட்ப அனுபவங்களை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BoAt Rockerz 255 Pro+ Wireless Neckband Earphones Launched With 300 mAh Battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X