Home
Gadgets

சும்மா கிழி.. பட்ஜெட்ல டால்பி ஆடியோ.. டீப் பேஸ் டிரைவர்கள்.. நாய்ஸ் கேன்சலேஷன்.. பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ, 11 மிமீ டீப் பேஸ் டிரைவர்கள், 50dB நாய்ஸ் கேன்சலேஷன், ஏஎஸ்ஏபி சார்ஜிங், மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி, லோவ் லேட்டன்சி மோட் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட்டில் போட் நிர்வனா ஜெனித் (boAt Nirvana Zenith) விற்பனை செய்யப்படுகிறது.

50 ஹைவர்ஸ் பிளே டைம், டூயல் கோர் சிப்செட், இன்-இயர் டிடெக்சன், கூகுள் ஃபாஸ்ட் பேர் போன்ற மற்ற பீச்சர்களும் பிரீமியமாக வருகின்றன. இந்த போட் நிர்வனா ஜெனித் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சும்மா கிழி.. பட்ஜெட்ல டால்பி ஆடியோ.. டீப் பேஸ் டிரைவர்.. எந்த மாடல்?

போட் நிர்வனா ஜெனித் அம்சங்கள் (boAt Nirvana Zenith Specifications): இந்த மாடலானது குரோம் கிளாஸ் டிசைனில் (Chrome Glass Design) டூயல் கலர் கொண்டிருக்கிறது. மிஸ்டிக் பிளாக் ( Mystique Black) மற்றும் செலஸ்டியல் ஒயிட் (Celestial White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

டிரெண்டிங் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) சப்போர்ட் கொண்ட 11 மிமீ டீப் பேஸ் டிரைவர்கள் (Deep Bass Drivers) வருகின்றன. ஆகவே, பேஸ் சவுண்ட் பிரியர்களுக்கு இந்த போட் நிர்வனா ஜெனித் மாடலானது பக்கா ஆப்ஷனாக இருக்கும்.

ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் கொண்ட டூயல்-கோஸ் ப்ராசஸர் (Dual-Core Processor) வருகிறது. போட் அடாப்டிவ் ஈக்யூ (boAt Adaptive EQ) மற்றும் இன்-இயர் டிடெக்சன் (In-ear detection) கொண்டுள்ளது. மேலும், போட் சரவுண்ட் சவுண்ட் (boAt Surround Sound) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) வருகிறது.

சும்மா கிழி.. பட்ஜெட்ல டால்பி ஆடியோ.. டீப் பேஸ் டிரைவர்.. எந்த மாடல்?

ஆகவே, ஆடியோ அவுட்புட் பிரீமியம் குவாலிட்டியில் எதிர்பார்க்கலாம். அதேபோல கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் காலிங் அவுட்புட் கொடுக்கும் விதமாக ஏஐ ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (AI ENx Technology) வருகிறது. 6X மைக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. இதுபோக 50dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் உள்ளது.

இந்த போட் நிர்வனா ஜெனித் மாடலில் பக்கா பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 50 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். அதோடு ஏஎஸ்ஏபி ஃபாஸ்ட் சார்ஜிங் (ASAP Fast Charging) சப்போர்ட் வருகிறது. இதன் கேஸில் 600mAh பேட்டரி மற்றும் பட்களில் தலா 45mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக 60ms லோவ் லேட்டன்சி சப்போர்ட் வருகிறது. பீஸ்ட் மோடில் இதை பயன்படுத்தலாம். இதற்கு கூடுதல் பேட்டரி பவர் தேவைப்படும். யுஎஸ்பி டைப் சி (USB Type C) சப்போர்ட் உள்ளது. 10 மீட்டர்கள் டிரான்ஸ்மிஷன் ரேஞ்ச் கொடுக்கும் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது.

கூகுள் ஃபாஸ்ட் ஃபேர் (Google Fast Pair) மற்றும் மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி (Multi-device Connectivity) வருகிறது. இன்ஸ்டா வேக் என் ஃபேர் (Insta Wake N Pair) டெக்னாலஜி வருகிறது. IPX5 வாட்டர் & ஸ்வெட் ரெசிஸ்டன்ட் (Water & Sweat Resistance) வருகிறது. இயரபில்ஸ் ஆப் (Hearables App) சப்போர்ட் உள்ளது.

இந்த போட் மாடலுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொண்டிருந்தும், இந்த போட் நிர்வனா ஜெனித் மாடலின் விலை ரூ.3,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் போட் ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் ரூ.200 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Nirvana Zenith with Dolby Audio, 50hrs Playtime Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X