Home
Gadgets

ஆடியோ சும்மா கிழிதான்.. DUAL டிரைவர்கள்.. FAST சார்ஜிங்.. 40 ஹவர்ஸ் பிளேபேக்.. 4 மைக்குகள்.. எந்த மாடல்?

மியூசிக் பிரியர்களுக்கு சும்மா கிழி என்று சொல்லும்படியான ஆடியோ அவுட்புட் கொடுக்கும் விதமாக போட் நிர்வனா எக்ஸ் (boAt Nirvana X) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. டூயல் டிரைவர்கள் மட்டுமல்லாமல், ஹை-ரெஸ் ஆடியோ, ஃபாஸ்ட் சார்ஜிங், 40 மணி நேரங்களுக்கு பேக்கப், 4 மைக்குகள், மல்டி பாய்ன்ட் கனெக்டிவிட்டி, லோவ் லேட்டன்சி மோட், இன்-இயர் டிடெக்சன் போன்ற ஒட்டுமொத்த டிடபுள்யூஎஸ் பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த போட் நிர்வனா எக்ஸ் மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

போட் நிர்வனா எக்ஸ் அம்சங்கள் (boAt Nirvana X Specifications): இந்த நிர்வனா மாடலில் கினொவ்ல்ஸ் (Knowles) பவர்ட் 10 எம்எம் டூயல் டிரைவர்கள் (Dual Drivers) கிடைக்கின்றன. இந்த டைனாமிக் டிரைவர்களில் ஹை-ரெஸ் ஆடியோ எல்டிஏசி (Hi-Res Audio LDAC) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக போட் ஹை-பை சவுண்ட் (boAt HiFi Sound) சப்போர்ட் வருகிறது.

ஆடியோ சும்மா கிழிதான்.. DUAL டிரைவர்கள்.. FAST சார்ஜிங்.. 40 ஹவர்ஸ்!

ஆகவே, ஆடியோ குவாலிட்டி மற்றும் சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸ் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். அதேபோல ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கிடைக்கிறது. இந்த ஆடியோ மூலம் சினிமாடிக் ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். வாய்ஸ் கால்களுக்காக 4 மைக்குகள் மட்டுமல்லாமல், அவற்றில் ஏஐ ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (AI ENx Technology) வருகிறது.

ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு ஏஐ மூலம் நாய்ஸ் கேன்சலேஷன் செய்யப்படுகிறது. இதன் மூலம் இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்கள் எக்ஸ்பீரியன்ஸ் எதிர்பார்க்கலாம். போட் அடாப்டிவ் ஈகியூ (boAt Adaptive EQ) வருகிறது. ஆகவே, மூவிஸ், சீரிஸ், பாட்காஸ்ட்களிலும் உங்களது புரொபைல் ஈகியூ மூலம் ஆடியோ அவுட் பெற்று கொள்ளலாம்.

மிமி (Mimi) மூலம் இந்த அவுட்புட் கிடைக்கிறது. இந்த போட் மாடலில் இன்-இயர் டிடெக்சன் (In-Ear Detection) வருகிறது. ஆகவே, நீங்கள் இயர்பட்களை கழட்டினால், ஆடியோ பாஸ் செய்யப்படும். மீண்டும் காதில் பொருத்தினால், ஆடியோ பிளே செய்யப்படும். இதன் மூலம் பேட்டரி பேக்கப் கூடுதலாக பெற்று கொள்ளலாம். மல்டிபாய்ன்ட் கனெக்டிவிட்டி (Multipoint Connectivity) உள்ளது.

இதன் மூலம் நீங்கள் டேப்லெட் மற்றும் மொபைல் போன்ற 2 டிவைஸ்களில் ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து வைத்து கொள்ளலாம். ஆகவே, டேப்லெட்டில் வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போதும், மொபைலில் வாய்ஸ் கால்களுக்கு பதில் கொடுக்க முடியும். கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) கிடைப்பதால் ஒன்-டச் கனெக்டிவிட்டி பெற்று கொள்ளலாம்.

ஆகவே, ப்ளூடூத் மட்டும் ஆன் செய்தால் போதும் உங்களது இயர்பட்ஸ் நொடியில் கனெக்ட் செய்யப்படும். IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதன் மூலம் ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்லும்போதும், ஸ்வெட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த போட் நிர்வனா எக்ஸ் மாடலில் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஏஎஸ்ஏபி சார்ஜிங் கிடைக்கிறது.

ஆகவே, வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 120 நிமிடங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இதுபோக ஆப் சப்போர்ட் கிடைக்கிறது. பர்சனல் ஈகியூகளை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்காக பீஸ்ட் மோட் (BEAST Mode) உள்ளது. இதன் மூலம் 60எம்எஸ் லோவ் லேட்டன்சி பெற்று கொள்ளலாம். இப்படி பெரும்பாலான பீச்சர்களை கொடுக்கிறது.

கேலடிக் ரெட் (Galactic Red), காஸ்மிக் ஓனிக்ஸ் (Cosmic Onyx), மிட்ஸ் ப்ளூ (Mist Blue) மற்றும் ஸ்மோக்கி அமேதிஸ்ட் (Smoky Amethyst) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போட் நிர்வனா எக்ஸ் மாடலின் விலை ரூ.2,799 ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.3000 பட்ஜெட்டில் பிரீமியம் இயர்பட்ஸ் வேண்டுமானால், பக்கா தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Nirvana X With 40 Hours Playback Quad Mics Launched Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X