சுத்தி சுத்தி அடிக்கும்.. பட்ஜெட்ல ஹெட் டிராக்கிங்.. 360 டிகிரி ஆடியோ.. 50 ஹவர்ஸ் பேக்கப்.. எந்த மாடல்?
ஹெட் டிராக்கிங் கொண்ட ஸ்பாஷியல் ஆடியோ, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட இன்-இயர் டிடெக்சன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்ஷலேஷன், கேமிங் பிரியர்களுக்கு லோவ் லேட்டன்சி கொடுக்கும் பீஸ்ட் மோட், 50 மணி நேரங்களுக்கு பேக்கப் மற்றும் ஏஎஸ்ஏபி சார்ஜிங் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் போட் நிர்வானா ஐவி (boAt Nirvana Ivy) இயர்பட்ஸ் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த போட் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் இயர்பட்ஸ் மாடல்களில் கிடைக்கும் பெரும்பாலான பீச்சர்களை இந்த போட் நிர்வானா ஐவி மாடலும் கவர் செய்துள்ளது. இருப்பினும், சோனி, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் மாடல்களை ஒப்பிடுகளையில் பட்ஜெட் கம்மியாகவே இருக்கிறது. கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மட்டுமல்லாமல், 360 டிகிரி ஆடியோ அனுபவம் வேண்டுமானால் இந்த மாடலுக்கு செல்லலாம்.

போட் நிர்வானா ஐவி அம்சங்கள் (boAt Nirvana Ivy Specifications): இந்த போட் மாடலில் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கொண்ட 11 மிமீ டைனாமிக் டிரைவர்கள் வருகின்றன. ஆகவே, 360 டிகிரியில் ஆடியோ அவுட்புட் கிடைக்கும். அதோடு டைனாமிக் ஹெட் டிராக்கிங் (Dynamic Head Tracking) வருவதால், ஹெட் மூவ்மெண்ட்களுக்கு ஏற்ப ஆடியோவை பெறலாம்.
நாய்ஸ் கன்ட்ரோலுக்காக 50dB ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Active Noise Cancellation) வருகிறது. கிரிஸ்டல் கிளியர் ஆடியோவை இது உறுதி செய்யும். அதேபோல வாய்ஸ் கால்களுக்குகாக ஏஐ சப்போர்ட் கொண்ட என்விராண்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) வருகிறது. ஆகவே, அவுட்டோரிலும் பக்கா அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
அதோடு இன்-இயர் டிடெக்சன் (In-Ear Detection) வருகிறது. இதன் மூலம், ஆட்டோமேட்டிக் பிளேபேக் கன்ட்ரோல் (Automatic Playback Control) பெற்று கொள்ளலாம். பேட்டரியும் நீடிக்கும். மிமி (Mimi) பவர்டு பர்சனலைஸ்டு ஆடியோ (Personalized Audio) செட்டிங் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ சிங்குக்காக 60ms பீஸ்ட் மோட் (BEAST Mode) வருகிறது.
இந்த போட் நிர்வானா ஐவி மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல பேட்டரியிலும் மிரளவிட்டுள்ளது. அதாவது, சார்ஜிங் கேஸில் 400mAh பேட்டரி கேப்பாசிட்டியும், இயர்பட்களில் தலா 40mAh பேட்டரியும் வருகிறது. ஆகவே, ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், மொத்தமாக 50 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
இதுபோக ஏஎஸ்ஏபி சார்ஜ் (ASAP Charge) சப்போர்ட் வருகிறது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 240 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்ற மல்டி டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ள ஏதுவாக மல்டி-பாய்ட் கனெக்டிவிட்டி (Multi-Point Connectivity) வருகிறது. மேலும், கூகுள் ஃபாஸ் பேர் (Google Fast Pair) சப்போர்ட் உள்ளது.
போட் இயரபிள் ஆப் (boAt Hearables App) மூலம் பயன்படுத்தலாம். இந்த போட் நிர்வானா ஐவி மாடலில் IPX5 ரெசிஸ்டன்ட் வருகிறது. மேலும், ப்ரீசெட் ஈகியூஸ் (Preset EQs), ஆம்பியன் மோட் (Ambient Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. கன்மெட்டல் பிளாக் (Gunmetal Black), கன்மெட்டல் ஒயிட் (Gunmetal White) மற்றும் குவார்ட்ஸ் சியான் (Quartz Cyan) கலர்களில் வருகிறது.
இவ்வளவ பீச்சர்களை பேக் செய்தும், இந்த போட் நிர்வானா ஐவி மாடலின் விலை ரூ.2,999 ஆக மட்டுமே இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), போட் (boat) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. பிரீமியம் மாடல் பட்ஜெட்டில் வேண்டுமானால், இது நல்ல தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








