Home
Gadgets

பிச்சிக்குது சேல்.. ரூ.2,499 பட்ஜெட்ல ஃபாஸ்ட் சார்ஜிங்.. 600mAh பேட்டரி.. ENx டெக்னாலஜி.. டச் கன்ட்ரோல்!

வெறும் ரூ.2,499 பட்ஜெட்டில் ஏஎஸ்ஏபி சார்ஜிங், 600mAh பேட்டரி, ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி, டச் கன்ட்ரோல், லோவ் லேட்டன்சி, நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அப்கம்மிங் டெக்னாலஜிகளுடன் போட் நிர்வனா அயன் (boAt Nirvana Ion) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போட் நிர்வனா அயன் அம்சங்கள் (boAt Nirvana Ion Specifications): இந்த போட் இயர்பட்ஸ் பிரீமியம் குலோவ் டிசைன் (Premium Glow Design) கொண்டுள்ளது. பட்ஜெட் விலையிலும் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி, ஈஎன்எக்ஸ், மல்டி பாய்ட் கனெக்டிவிட்டி போன்ற பெரும்பாலான டெக்னாலஜிகளை கவர் செய்துள்ளது.

ரூ.2,499 பட்ஜெட்ல ஃபாஸ்ட் சார்ஜிங்.. 600mAh பேட்டரி.. ENx டெக்னாலஜி!

ஆகவே, இந்த மாடலில் 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் வருகிறது. அதேபோல பீஸ்ட் மோட் (Beast Mode) என்னும் 60ms லோவ் லேட்டன்சி (Low Latency) சப்போர்ட் கொண்டுள்ளது. இதன் மூலம் கேமிங் பிரியர்கள் விரும்பும் குவாலிட்டியான ஆடியோ/வீடியோ சிங்க் (Audio Video Sync) கிடைக்கும்.

அதேபோல ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் கனெக்ட் செய்யும்போது, குயிக் பேரிங் (Quick Pairing) சப்போர்ட் வருகிறது. இதில் ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல ஹைபை டிஎஸ்பி 5 (HIFI DSP 5) டெக்னாலஜி கொண்ட கிரிஸ்டல் பயோனிக் சவுண்ட் (Crystal Bionic Sound) சப்போர்ட் வருகிறது.

அதோடு ஈஎன்எக்ஸ் (ENx) டெக்னாலஜி கொண்ட 4 மைக்குகள் (Mics) கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, வாய்ஸ் காலிங் அனுபவம் அல்ட்ரா குவாலிட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதேபோல மியூசிக் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக, டூயல் ஈகியூ மோட் (Dual EQ Mode) வருகிறது.

ரூ.2,499 பட்ஜெட்ல ஃபாஸ்ட் சார்ஜிங்.. 600mAh பேட்டரி.. ENx டெக்னாலஜி!

அதில் போட் பேலன்ஸ்டு (boAT Balanced) மற்றும் சிக்னேச்சர் சவுண்ட் (Signature Sound) மோட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடலில் 10 மிமீ டிரைவர்கள் வருகின்றன. இன்-இயர் டிடெக்சன் (In-Ear Detection) சப்போர்ட் வருகிறது. ஆகவே, இயர்பட்ஸ் காதில் வைக்காதவரையில், ஆடியோ அவுட்புட் கொடுக்காது.

அதேபோல காலிங் மற்றும் மியூசிக் கன்ட்ரோலுக்காக டச் கன்ட்ரோல்ஸ் (Touch Controls) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மல்டி பாய்ன்ட் கனெக்டிவிட்டி (Multipoint Connectivity) வருகிறது. ஆகவே, ஒரே நேரத்தில் மொபைல், லேப்டாப் என்று 2 டிவைஸ்களில் டூயல் பேரிங் (Dual Pairing) செய்து கொள்ளலாம்.

இந்த போட் நிர்வனா அயன் மாடலில் மிரளவிடும் பேட்டரி சிஸ்டம் வருகிறது. ஏஎஸ்ஏபி சார்ஜிங் (ASAP Charging) சப்போர்ட் கொண்ட 600mAh பேட்டரி வருகிறது. அதேபோல ஒவ்வொரு இயர்பட்டிலும் தலா 70mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது, தொடர்ந்து 120 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது.

அதோடு டைப்-சி (Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. இந்த போட் நிர்வனா அயன் மாடலை போட் இயரபில்ஸ் ஆப் (boAt Hearables App) மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். குவார்ட்ஸ் ஒயிட் (Quartz White), மற்றும் கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதற்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த போட் நிர்வனா அயன் மாடலின் விலை வெறும் ரூ.2,499ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகையாகும். ஆகவே, விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த மாடலை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Nirvana Ion Earbuds With 600mAh Battery, ASAP Charge Sale on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X