Home
Gadgets

boAt சும்மா கிழி.. 50 dB ஏஎன்சி.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. 40 மணி நேர பேக்கப்.. டயல் கன்ட்ரோல்.. எந்த மாடல்?

போட் நிறுவனத்தின் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்பட்ஸ் மாடலான போட் நிர்வனா கிரவுன் (boAt Nirvana Crown) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 3டி ஸ்பாஷியல் ஆடியோ, 50 dB ஏஎன்சி, 40 மணி நேர பேக்கப் மற்றும் சார்ஜிங் கேஸில் டயல் கன்ட்ரோல் போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த போட் நிர்வனா கிரவுன் மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் லுக் கொடுக்கும்படி பிளேசிங் ரெட் (Blazing Red), கன்மெட்டல் கிரே (Gunmetal Gray) மற்றும் சப்பயர் ப்ளூ (Sapphire Blue) ஆகிய கலர்களில் சார்ஜிங் கேஸ் மற்றும் பட்கள் கிடைக்கின்றன. இதில் சார்ஜிங் கேஸில் சோனிக் ஏஆர்சி டெக்னாலஜி (Sonic ARC) டெக்னாலஜி கிடைக்கிறது. அட்வான்ஸ்டு ரோட்டேஷனல் கிரவுண் (Advanced Rotational Crown) கொடுக்கப்பட்டுள்ளது.

boAt சும்மா கிழி.. 50 dB ஏஎன்சி.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. எந்த மாடல்?

அதாவது, சார்ஜிங் கேஸில் ரேட்டேட்டபிள் கன்ட்ரோல் டயல் (Rotatable Control Dial), மல்டி ஃபங்ஸ்னல் பட்டன் (Multifunctional Button) மற்றும் ஆர்ஜிபி எல்இடி (RGB LED) இன்டிகேட்டர் கிடைக்கிறது. இந்த ரேட்டேட்டபிள் கன்ட்ரோல் வழியாக வால்யூம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். மல்டி ஃபங்ஸ்னல் பட்டன் வழியாக கால் கன்ட்ரோல் செய்யலாம்.

மேலும், பிளே மற்றும் பாஸ் கிடைக்கிறது. ஆர்ஜிபி எல்இடி இன்டிகேட்டர் வழியாக பேட்டரி லெவலை தெரிந்து கொள்ளலாம். இதுபோக, ஹேப்டிக் வைப்ரேஷன் கன்ட்ரோல், கெஸ்ச்சர் கன்ட்ரோல், பட் கெஸ்ச்சர் கன்ட்ரோல் ஆகியவற்றை செய்து கொள்ளலாம். எல்இடி லைட் கலர்களையும் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

போட் நிர்வனா கிரவுன் அம்சங்கள் (boAt Nirvana Crown Specifications): 10 எம்எம் டிரைவர்களை இந்த போட் நிர்வனா கிரவுன் கொண்டுள்ளது. ப்ளூடூத் வி6.0 (Bluetooth V6.0) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர் (Microsoft Swift Pair) கிடைத்துள்ளது. போட் இயரபிள் ஆப் 2.0 (boAt Hearables App v2.0) சப்போர்ட் உள்ளது.

இந்த ஆப் வழியாக கஸ்டமைசபிள் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். இன்-இயர் டிடெக்சன் (In-ear Detection) கொண்ட மாடலாக இந்த போட் நிர்வனா கிரவுன் இருக்கிறது. ஆகவே, ஆட்டோ பாஸ் மற்றும் பிளே செய்து கொள்ளலாம். 50 dB ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Active Noise Cancellation) கிடைக்கிறது. 360 ஆடியோ கொடுக்க ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) உள்ளது.

கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்கா 6 மைக்குகள் கிடைக்கின்றன. இதில் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) கிடைத்துள்ளது. மல்டி பாய்ன்ட் கனெக்டிவிட்டியை இந்த போட் நிர்வனா கிரவுன் கிடைத்துள்ளது. ஆகவே, ஒரே நேரத்தில் டூயல் டிவைஸ்களில் கனெக்டிவிட்டியை செய்து கொள்ளலாம்.

ஏஎன்சி மோட் (ANC Mode) மற்றும் நன் ஏஎன்சி மோட் (Non ANC Mode) கிடைக்கிறது. இதில் ஏஎன்சி மோடில் பயன்படுத்தினால், 25 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். நன் ஏஎன்சி மோடில் இந்த போட் நிர்வனா கிரவுன் மாடலை பயன்படுத்தினால் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இது இருக்கிறது.

ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். சார்ஜிங் கேஸை புல் சார்ஜ் செய்ய 90 நிமிடங்களாகும். இயர்பட்களை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த போட் நிர்வனா கிரவுன் மாடலின் விலை ரூ.2,799 ஆக இருக்கிறது. இருப்பினும், முதல் 7 நாட்களுக்கு ரூ.2,499 விலைக்கு கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Nirvana Crown With 50 dB Hybrid Active Noise Cancellation Launched Under Rs 3000 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X