SALE ஆரம்பம்! இப்படி ஒரு பட்ஜெட் விலை BOAT Watch-க்கு தான் ஊரே காத்து கிடந்துச்சு! என்ன மாடல்?
சாம்சங், ரெட்மி, ரியல்மி, ஆப்பிள், ஒன்பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது சொந்த பிராண்டின் கீழ் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்தாலும் கூட, இந்திய நிறுவனமான போட் (Boat) பிராண்டின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கென ஒரு தனி ரசிகர் / வாடிக்கையாளர் பட்டாளமே உள்ளது!
ஏனென்றால், போட் நிறுவனமானது பல வகையான பட்ஜெட்டில், பல வகையான தேவைகளை பூர்த்தி செய்யும் பல எண்ணிக்கையிலான ஸ்மார்ட் வாட்ச்களை தன்வசம் கொண்டுள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில், போட் லூனார் டைகன் (Boat Lunar Tigon) என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமானது.

தற்போது இந்த ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கியுள்ளது. போட் லூனார் டைகன் ஸ்மார்ட் வாட்சின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? மற்ற வாட்ச்களுடன் ஒப்பிடும் போது இது எப்படி வேறுபடுகிறது? இதோ விவரங்கள்:
போட் லூனார் டைகன் ஸ்மார்ட்வாட்ச்சில் அப்படி என்ன ஸ்பெஷல்? சந்தையில் வாங்க கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச்களிடம் இருந்து இதை வேறுபடுத்துவது அதன் ஹை ரெசல்யூஷன் அமோஎல்இடி டிஸ்பிளே (High-resolution AMOLED display) மற்றும் மாறுபட்ட ஸ்ட்ராப் டிசைனும் (Strap designs) தான்.

போட் லூனார் டைகன் ஸ்மார்ட் வாட்ச்சின் முக்கிய அம்சங்கள்: இது 466 x 466 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் (Pixels Resolution), 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் (600 nits Brightness) மற்றும் ஆல்வேஸ்-ஆன் (Always-on) ஆதரவு உடனான 1.45-இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ரவுண்ட் டயல் டிசைனை (Round dial design) உடன் வரும் போட் லூனார் டைகன் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஓஷன் ரிட்ஜ் (Ocean ridge) மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப்ஸ் (Metallic straps) என்கிற இரண்டு முற்றிலும் வேறுபட்ட ஸ்ட்ராப் ஆப்ஷன்களுடன் வருகிறது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, லூனார் டைகான் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ப்ளூடூத் காலிங் ஆதரவு, பில்ட்-இன் ட மைக்ரோஃபோன் மற்றும் 10 சேவ்டு காண்டாக்ட்களை எளிமையாக அணுக உதவும் குவிக் டயல் பேட் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இந்த வாட்ச் வாய்ஸ் அசிஸ்டென்ட்களையும் ஆதரித்து ஹேண்ட்ஸ்-ஃப்ரீ கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.
உடல்நல கண்காணிப்புகளை பொறுத்தவரை, இது ஹார்ட் ரேட் (Heart rate) ட்ராக்கிங், எஸ்பிஓ2 (SpO2) மானிட்டரிங், டெய்லி ஆக்டிவிட்டி (Daily activity ) ட்ராக்கிங், மென்ஸ்சுரல் சைக்கிள் (Menstrual cycle) ட்ராக்கிங் மற்றும் கைடட் ப்ரீதிங் (Guided breathing) பயிற்சிகள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.
விளையாட்டு ஆர்வலர்களுக்காக, போட் லூனார் டைகன் ஸ்மார்ட் வாட்ச்சில் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (100+ sports modes) உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐபிP67 தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான மதிப்பீட்டையும் (IP67 dust and water resistance rating) கொண்டுள்ளது. கடைசியாக இது சிங்கிள் சார்ஜில் 7 நாட்கள் வரை இயங்கும் திறனை கொண்டுள்ளது.
போட் லூனார் டைகன் ஸ்மார்ட் வாட்ச்சில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: கேமரா கண்ட்ரோல் (Camera Control), லைவ் கிரிக்கெட் ஸ்கோர் (Live Cricket), மியூசிக் கண்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), அலாரம், கவுண்டவுன் (Countdown), ஸ்டாப்வாட்ச் (StopWatch), டூ நாட் டிஸ்டர்ப் மோட் (DND Mode) மற்றும் ஃபைண்ட் மை ஃபோன் அம்சம்.
விலை மற்றும் விற்பனை: ஓஷன் ரிட்ஜ் ஸ்ட்ராப் உடன் போட் லூனார் டைகன் ஸ்மார்ட் வாட்ச்சின் அறிமுக விலை ரூ.2899 ஆகும் மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.2,999 ஆகும். இவ்விரண்டுமே வேரியண்ட்களுமே பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக ஏற்கனவே வாங்க கிடைகின்றன.


Click it and Unblock the Notifications