Home
Gadgets

ஆளுக்கு 1 வாங்குவீங்க.. eSIM.. ஜிபிஎஸ்.. IP68 ரேட்டிங்.. அறிமுகமானது BOAT Watch.. எந்த மாடல்?

இந்திய நிறுவனமான போட் (Boat) தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போட் நிறுவனம் இ-சிம் ஆதரவுடன் கூடிய புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது தற்போது போட் லூனார் ப்ரோ எல்டிஇ (boAt Lunar Pro LTE) எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடல் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது போட் லூனார் ப்ரோ எல்டிஇ ஸ்மார்ட்வாட்ச் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆளுக்கு 1 வாங்குவீங்க..  eSIM.. ஜிபிஎஸ்.. அறிமுகமானது BOAT Watch..

போட் லூனார் ப்ரோ எல்டிஇ அம்சங்கள் (boAt Lunar Pro LTE specifications): 1.39-இன்ச் ஆல்வேஸ்-ஆன்-அமோலெட் (always-on AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு கஸ்டம் வாட்ச் பேஸ்கள் இதில் வருகிறது. மேலும் பயனர்கள் தங்கள் விரும்பிய டிஸ்பிளே அம்சங்களை இதில் பயன்படுத்தலாம். குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

உடல்நல கண்காணிப்புகளைப் பொறுத்தவரை, ஹார்ட் ரேட் (Heart rate) ட்ராக்கிங், எஸ்பிஓ2 (SpO2) மானிட்டரிங், டெய்லி ஆக்டிவிட்டி (Daily activity ) ட்ராக்கிங், மென்ஸ்சுரல் சைக்கிள் (Menstrual cycle) ட்ராக்கிங் மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்குகிறது இந்த அசத்தலான போட் லூனார் ப்ரோ எல்டிஇ ஸ்மார்ட்வாட்ச்.

ப்ளூடூத் காலிங் ஆதரவு (Bluetooth calling), பில்ட்-இன் மைக்ரோஃபோன், ஆப் நோட்டிபிகேஷன் (app notifications)உள்ளிட்ட சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போட் ஸ்மார்ட்வாட்ச். மேலும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (100+ sports modes) கொண்டு வெளிவந்துள்ளது போட் லூனார் ப்ரோ எல்டிஇ ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் இன்பில்ட் ஜிபிஎஸ் (built-in GPS) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போட் லூனார் ப்ரோ எல்டிஇ மாடல். இது துல்லியமான இருப்பிட கண்காணிப்பை உறுதி செய்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் சிறந்த பாதுகாப்பு
வசதியுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

577எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போட் லூனார் ப்ரோ எல்டிஇ ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது.

ஆளுக்கு 1 வாங்குவீங்க..  eSIM.. ஜிபிஎஸ்.. அறிமுகமானது BOAT Watch..

அதாவது இ-சிம் ஆதரவைக் கொண்டுள்ளது போட் லூனார் ப்ரோ எல்டிஇ ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இந்த இ-சிம் இணைப்புக்கு வேண்டி ஜியோ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது போட் நிறுவனம். ஜியோவின் வலுவான 4ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் இந்த போட் லூனார் ப்ரோ எல்டிஇ ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் இ-சிம் உடன் வெளிவந்துள்ளதால், இதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் போட் லூனார் ப்ரோ எல்டிஇ ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை போட் நிறுவனம். இருந்தபோதிலும் வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும் என்று ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளன. குறிப்பாக இதுபோன்ற புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை வாங்குவது மிகவும் நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Lunar Pro LTE with eSIM support, built-in GPS launched in India: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X