பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 300mAh பேட்டரி.. App கன்ட்ரோல்.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், நேவிகேஷன் சப்போர்ட், போட் எக்ஸ்1 சிப்செட், கிரெஸ்பிளஸ் ஓஎஸ், 300mAh பேட்டரி, 7 நாட்கள் பேக்கப், ஆக்டிவிட்டி டிராக்கர்கள் மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் மட்டுமல்லாமல் பிரீமியம் மெட்டாலிக் பாடி டிசைன் கொண்ட போட் லூனார் ஓயசிஸ் (boAt Lunar Oasis) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. வாய்ஸ் காலிங், எஸ்எம்எஸ் ரீப்ளை, ஆப் நோட்டிபிகேஷன், கேமரா கன்ட்ரோல் போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை இதோ.
போட் லூனார் ஓயசிஸ் அம்சங்கள் (boAt Lunar Oasis Specifications): ரவுண்ட் டயல் டிசைனில் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொன்ட ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். ஆகவே, அவுட்டோர் அவுட்புட் கிரிஸ்டல் கிளியராக இருக்கும்.

கிரவுண் கன்ட்ரோல் செய்துகொள்ளலாம். மெட்டாலிக் பில்ட் கொண்டிருக்கிறது. சிலிகான் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் மாடல்கள் வருகிறது. டிஐஒய் வாட்ச் பேஸ் ஸ்டூடியோ (DIY Watch Face Studio) சப்போர்ட்டுடன் கிரெஸ்ட் ஆப் (Crest App) வருகிறது. இந்த ஆப் மூலம் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன.
இந்த லூனார் ஓயசிஸ் மாடலில் போட் எக்ஸ்1 (boAt X1) சிப்செட் மற்றும் கிரெஸ்பிளஸ் ஓஎஸ் (Cres+ OS) வருகிறது. ஆகவே, பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட யுஐ (UI) கிடைக்கும். ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ஆகவே, ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
மேலும், குயிக் டயல் பேட் (Quick Dial Pad), கான்டாக்ட்ஸ் மெமரி மற்றும் கிஆர் டிரேய் (QR Tray) சப்போர்ட் உள்ளது. நேவிகேஷன் சப்போர்ட் உள்ளது. கிரெஸ்ட் ஆப் மூலம் இதை பயன்படுத்தி கொள்ளலாம். ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங், கிளம்பிங் உள்ளிட்ட 700+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன.
ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracker) வருகிறது. ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) உள்ளன. ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), செடன்டரி ரீமைண்டர் (Sedentary Reminder) உள்ளிட்டவை வருகின்றன. இந்த போட் லூனார் ஓயசிஸ் மாடலில் 300mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரி மூலம் 7 நாட்கள் பேக்கப் கிடைக்கும். அதேபோல ப்ளூடூத் காலிங் மோடில் (Bluetooth Calling Mode) 2 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கேமரா கன்ட்ரோல் (Camera Control), கேம்ஸ் (Games), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட்ஸ் (Weather Updates) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இந்த மாடலில் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஆலிவ் கிரீன் மேக்னடிக் சிலிகான் ஸ்ட்ராப் (Olive Green Magnetic Silicone Strap), ஆக்டிவ் பிளாக் சிலிகான் ஸ்ட்ராப் (Active Black Silicone Strap) மற்றும் பிளாக் மெட்டல் ஸ்ட்ராப் (Black Metal Strap) கலர்களில் ஆர்டருக்கு வருகிறது.
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் (boAt) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போட் லூனார் ஓயசிஸ் மாடலின் விலை ரூ.3299ஆக இருக்கிறது. இது அறிமுக சலுகையாகும் விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரீமியம் பீச்சர்களுடன் நியாயமான விலையில் ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த மாடலை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








