புரட்டிபோடும் பட்ஜெட்.. வெறும் ரூ.1,099 போதும்.. HD டிஸ்பிளே.. மேப் நேவிகேஷன்.. 260mAh பேட்டரி.. எந்த மாடல்?
பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், டர்ன்-பை டர்ன் நேவிகேஷன், ஆக்டிவிட்டி டிராக்கிங், ஹெல்த் டிராக்கிங், கேமரா கன்ட்ரோல், 7 நாட்கள் பேக்கப் கொடுக்கும் 260mAh பேட்டரி மற்றும் IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் போட் லூனார் டிஸ்கவரி (boAt Lunar Discovery) களமிறங்கி இருக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பட்ஜெட்டில் ஸ்மார்ட்வாட்ச் வாங்கினால், அதில் கஸ்டமர்கள் எதிர்பார்க்கும் பீச்சர்கள் கிடைக்காது. அதேபோல ஹெல்த் டிராக்கிங், ஆக்டிவிட்டி டிராக்கிங் போன்ற பீச்சர்கள் கிடைப்பதும் கஷ்டம்தான். ஆனால், இந்த போட் லூனார் டிஸ்கவரி மாடலானது, பெரும்பாலான பீச்சர்களை பேக் செய்துள்ளது. அதேநேரத்தில் பிரீமியம் லுக் கொடுப்பதால் இந்திய மார்கெட்டில் வரவேற்பு பெற்றிருக்கிறது.

போட் லூனார் டிஸ்கவரி அம்சங்கள் (boAt Lunar Discovery Specifications): இந்த போட் மாடலில் (HD) ரெசொலூஷன் மற்றும் வேக் கெஸ்ச்சர் (Wake Gesture) கொண்ட 1.39 இன்ச் (240 × 240 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. ரவுண்ட் டயல் டிசைனில் ஃபங்ஷ்னல் கிரவுண் (Functional Crown) கன்ட்ரோல் வருகிறது. மேட் பினிஷிங் பாடி கொண்டிருக்கிறது. மெட்டாலிக் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் இருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச் பிரியர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ப்ளூடூத் காலிங் பீச்சர் (Bluetooth Calling Feature) வருகிறது. ஆகவே, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டியுடன் குயிக் டயல் பேட் (Quick Dial Pad) வருகிறது. அதேபோல பில்ட்-இன் எச்டி மைக்ரோபோன் (Built-in HD Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்களுக்காக டிஐஒய் வாட்ச் பேஸ் ஸ்டூடியோ (DIY Watch Face Studio) உள்ளது.
இந்த போட் லூனார் டிஸ்கவரி மாடலில் கிரெஸ்ட்பிளஸ் ஓஎஸ் (Crest+ OS) வருகிறது. இந்த ஓஎஸ் மூலம் மேப்மைஇந்தியா சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் (Turn-by-turn Navigation) செய்து கொள்ளலாம். சைக்கிளிங் பிரியர்களுக்கு இந்த நேவிகேஷன் பக்கா ஆப்ஷனாக இருக்கும். இதுபோக ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் ஹெல்த் டிராக்கர்களை இந்த மாடல் கொடுக்கிறது.

ஆகவே, 700+ ஸ்போர்ட்ஸ் மோட்களை (Sports Modes) டிராக்கிங் செய்து கொள்ளலாம். ஹெல்த் டிராக்கிங்கை பார்க்கையில் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் எனர்ஜி ஸ்கோர் (Energy Score) சப்போர்ட் வருகிறது. இந்த மானிட்டரிங் டேட்டாவை கிரெஸ்ட் ஆப் (Crest App) மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வாட்ச்சின் பேட்டரி சிஸ்டம் பட்டையை கிளப்பி இருக்கிறது.
7 நாட்கள் நார்மல் மோடிலும், 4 நாட்கள் ப்ளூடூத் காலிங் மோடிலும் பேக்கப் கொடுக்கும்படி 260mAh பேட்டரி வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு 3 நாட்கள் பேக்கப் எதிர்பார்க்கலாம். ஆனால், இதில் 7 நாட்கள் கிடைக்கிறது. இந்த போட் மாடலின் ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Camera & Music Control), குயிக் ரிப்ளை (Quick Reply), ஃபைண்ட் மை போன் (Find My Phone) வருகிறது.
மேலும், வழக்கமான வெதர் அப்டேட்கள் (Weather Update), லைவ் ஸ்போர்ட்ஸ் அப்டேட் (Live Sports Updates) கிடைக்கிறது. IP67 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. ஆக்டிவ் பிளாக், பிரவுண், ஆக்டிவ் ப்ளூ, செர்ரி பிளாசம், மின்ட் கிரீன் மற்றும் மெட்டல் பிளாக் கலர்கள் வருகின்றன. இவ்வளவு பீச்சர்கள் இருந்தும் வெறும் ரூ.1,099 பட்ஜெட்டில் வருகிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








