சும்மா கிழி ரூ.2000.. 50 மணிநேர கத்தி மாதிரி ஆடியோ.. கலக்கலான boat Immortal Katana Blade இயர்பட்ஸ்..
புகழ்பெற்ற போட் (boat) நிறுவனம், கேமர்களுக்கான பிரத்தியேக இம்மார்டல் இயர்பட்ஸ் ஸீரிஸில் கடானா ப்ளேடு (boat Immortal Katana Blade) என்ற புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த TWS கேமிங் இயர்பட்ஸின் சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை பார்க்கலாம் வாங்க.
சுலபமாக அணிந்து கொள்ள ஏதுவான கச்சிதமான வடிவமைப்பு, வயர்லெஸ் கனெக்ஷன் (Wireless connection), எளிய பயன்பாடு போன்ற காரணங்களால் இன்று இயர்பட்கள் (Earbuds) பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அதிகம் பயணம் செய்வோர், நிறைய மீட்டிங்கில் பங்கேற்பவர்கள், அதிகமாக கால் பேசுபவர்கள் ஆகியோருக்கு இயர்பட்ஸ் ஒரு வரம்.

ஆரம்பகாலத்தில் ஐபோன் பயனாளர்கள் மட்டுமே பட்ஸ் பயன்படுத்தி வந்த நிலையில் மலிவான விலையில் ஆண்ட்ராய்ட் (Android) பயனாளர்களுக்கும் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி குறைந்த விலையில் சிறந்த இயர்பட்ஸ் வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான ஒன்று தான் போட் (boAt). இன்றைய தேதிக்கும் போட்-ன் அனைத்து வியரபில்ஸ் ரேஞ்சுகளும் (Wearables range) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
போட் இம்மார்ட்டல் கட்டானா பிளேடு (boat Immortal Katana Blade):
அப்படி அனைவரையும் தனது வியரபில் மூலம் கவர்ந்த போட் கேமர்களுக்காகவே (Gamers) பிரத்தியேகமாக இம்மார்டல் (Immortal) என்ற இயர்பட் சீரிஸை வழங்கி வருகிறது. இந்நிலையில் தனது ட்ரூலி வயர்லெஸ் (Truly wireless) இயர்பட்ஸ் வரிசையில் புதிய அறிமுகமாக கடானா ப்ளேட் (Katana Blade) இயர்பட்ஸ் என்ற வேரியண்டை இணைத்துள்ளது.
கடானா என்பது ஜப்பான் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படும் வாளை குறிக்கும். பொதுவாக நிஞ்சாக்கள் வேகமாக செயல்பட பயன்படுத்தப்படும் இந்த வாள் லேசாக வளைந்து காணப்படும். நிஞ்சாக்களின் செயல்பாடுகளை ஒத்து வேகமான சார்ஜிங், கடினமான தன்மையை கொண்டதால் கடான ப்ளேட் என்ற பெயர் இதற்கு மிகவும் பொருத்தமானது என்றே கூறலாம்.
இந்த கடானா ப்ளேட் இயர்பட்ஸின் வெளிபுற தோற்றமே அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடானா என்ற பெயருக்கு நியாயம் செய்யும் வகையில் கடானா வாளின் உறையை போல மெட்டல் பாடி (Metal body) கொண்டு இந்த இயர்பட்ஸின் கேஸ் (Case) வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்லைடிங் மோஷன் பாடி கேஸ் (sliding motion body case):
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமான கேஸ்களைப் போல ஃப்ளிப் (Flip) முறையில் இல்லாமல் உறையில் இருந்து வாளை உருவது போல ஸ்லைட் (Slide) செய்து தான் கேஸை ஓப்பன் செய்ய வேண்டும்.
போட்-ன் இயர்பட்ஸ் சீரிஸ்களில் ஸ்லைடிங் மோஷன் (Sliding motion) மூலம் திறக்கப்படுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் முதல் வேரியண்ட் இந்த கடானா ப்ளேட் தான்.
இந்த கடானா ப்ளேட் இயர்பட்ஸ் கேஸில் இருக்கும் மற்றொரு கவர்ச்சிகரமான அம்சம், கேஸை ஸ்லைட் செய்து திறக்கும்போது வாள் வீசுவது போல ஒலி எழுப்பப்படும். இதற்காக பிரத்தியேகமாக இன்பில்ட் ஸ்பீக்கர்கள் (Inbuilt speakers) கேஸில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டைனமிக் (Dynamic) RGB லைடிங் (Lighting) அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடானா ப்ளேட் இயர்பட்ஸில் ப்ளூடூத் v5.3 மற்றும் இன்ஸ்டன்ட் வேக்-ன்-பேர் (Instant Wake-N-Pair) அம்சம் உள்ளதால் கேஸ் திறக்கப்பட்டவுடன் அருகில் இருக்கும் டிவைஸுடன் (Device) சுலபமாக பேர் ஆகிவிடும். மேலும், 13mm ட்ரைவர் (Driver), பீஸ்ட் மோடில் (Beast mode) 50ms லேடன்ஸி (Latency) ஆகியவை சிறந்த சவுண்ட் அனுபவத்தை தரும்.
50 மணி நேர பிளேபேக் நேரம் (50 hours playback time):
முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட கடானா ப்ளேட் இயர்போனை தொடர்ச்சியாக 50 மணி நேரம் கேமிங் மற்றும் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்த முடியும். மேலும், இதில் இருக்கும் ASAP அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் பயன்படுத்தலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான போட் தெரிவித்துள்ளது.
கூடுதலாக IPX4 ரேட்டிங்குடன் வியர்வை மற்றும் அக்சிடென்டல் வாட்டர் ஸ்ப்லாஷ் (Accidental water splash) போன்றவற்றில் சேதமடையாமல் இருக்கும் தன்மையை கொண்டுள்ளது. கன்மெட்டல் ப்ளாக் (Gunmetal black) மற்றும் க்ரே (Grey) என்று இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும். இந்த கடானா ப்ளேட் இயர்பட்ஸ் ரூ.2299 விலையில் அமேசான் மற்றும் பிரத்தியேக போட் இணையதளம் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








