மிரளுது பட்ஜெட்.. GAME மோட்.. RGB எல்இடி.. 500mAh பேட்டரி.. FAST சார்ஜிங்.. எந்த மாடல்?
கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக கம்மி பட்ஜெட்டில் லோவ் லேட்டன்சி மோட், டச் கன்ட்ரோல், இன்ஸ்டா வேக் என் கனெக்டிவிட்டி, 500mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் போட் இம்மார்டல் கட்டானா பிளேடு (boAt Immortal Katana Blade) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கம்மியான விலையில் பெரும்பாலான பிரீமியம் அம்சங்களை கொண்ட இயர்பட்ஸ் வாங்க நினைப்பவர்களுக்கும், ஆன்லைன் கேமிங் பிரியர்களுக்கும் ஏற்ற வகையில், புதுவிதமான டிசைன் மற்றும் அம்சங்களை போட் இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது, பார்ப்போம்.

போட் இம்மார்டல் கட்டானா பிளேடு அம்சங்கள் (boAt Immortal Katana Blade Specifications): இந்த போட் இயர்பட்ஸ் மெட்டல் கிளைடர் (Metal Glider) டிசைன் கொண்டிருக்கிறது. அதில் டைனாமிக் ஆர்ஜிபி எல்இடி (Dynamic RGB LED) லைட்ஸ் இடம் பெற்றுள்ளது. இதில் 13 மிமீ டைனாமிக் டிரைவர்கள் (Dynamic Drivers) வருகின்றன.
இந்த போட் இம்மார்டல் கட்டானா பிளேடு மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்விட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, வாய்ஸ் காலிங் அனுபவம் பிரீமியம் குவாலிட்டியாக இருக்கும். அதேபோல போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஆடியோ குவாலிட்டியும் கிரிஸ்டல் கிளியராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸ் டச் கன்ட்ரோல் (Touch Controls) கொண்டுள்ளது. இந்த மாடலில் மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்ற டிவைஸ்களுடன் நொடியில் கனெக்ட் செய்ய ஏதுவாக இன்ஸ்டா வேக் என் (Insta Wake N) பேரிங் சப்போர்ட் (Pair Support) கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு கேமிங் இயர்பட்ஸ் என்பதால், 50எம்எஸ் பீஸ்ட் மோட் (BEAST Mode) லோவ் லேட்டன்சி (Low latency) வருகிறது.

இந்த போட் இயர்பட்ஸ் பக்காவான பேட்டரி சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 500mAh பேட்டரி கேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தலா 35mAh பேட்டரி இயர்பட்களில் வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் கனெக்டிவிட்டி வருகிறது. அதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 180 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும்.
அதே போல ஒரு ஃபுல் சார்ஜில் மொத்தமாக 50 மணி நேரம் பிளேபேக் டைம் கொடுக்க கூடியது. இந்த இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸில் IPX4 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோ போன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் 1 வருட வாரண்டியோடு விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த போட் இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸ் பிளாக் (Black) மற்றும் கிரே (Grey) கலரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த இயர்பட்ஸின் விலை வெறும் ரூ.2,299 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் அறிமுக சலுகை மட்டுமே. விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போட் இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸை அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் வெப்சைட்டில் (boAt website) ஆகியவற்றில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ள முடியும். பட்ஜெட்டில் பெரும்பாலான அம்சங்களா கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இதை ஆப்சனில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








