Home
Gadgets

இதுலயும் நாங்கதான்: கம்மி விலையில் ஸ்மார்ட்வாட்ச் களமிறக்கிய boAT- அதில் இதுக்கு ரொம்ப முக்கியத்துவம்!

boAT என்றவுடன் நினைவுக்கு வருவது ஹெட்செட், இயர்போன்கள், ப்ளூடூத் இயர்போன்கள் போன்ற ஒலி சம்பந்தம்பட்ட சாதனங்களே ஆகும். போட் எக்ஸ்ப்ளோரரின் உள்ளமைக்கப்பட்ட நேரடி வானிலை முன்னறிவிப்புகள் உடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

போட் புதிய ஸ்மார்ட்வாட்ச்

போட் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. போட் எக்ஸ்ப்ளோரரில் உள்ளமைக்கப்பட்ட நேரடி வானிலை முன்னறிவுப்புகள் மற்றும் அடுத்த 3 நாட்கள் வானிலை முன்னறிவுப்புகளை வழங்கும் வசதியோடு இது வருகிறது.

போட் எக்ஸ்ப்ளோரர் சாதனம்

போட் எக்ஸ்ப்ளோரர் சாதனம்

போட் எக்ஸ்ப்ளோரர் சாதனத்தின் அறிமுக விலை குறித்து பார்க்கையில் இது ரூ.2,999 என இருக்கும் எனவும் 1 ஆண்டு நிலையான தொழில் உத்தரவாதத்துடன் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இது தங்களது செயலின் வாழ்க்கை முறையை உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் 24x7 இதய துடிப்பு டிராக்கர் உடன் தினசரி செயல்பாட்டு டிராக்கரும் ஜோடியாக பொருத்தப்பட்டுள்ளது.

பல்வேறு உடற்பயிற்சிகள்

இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது நடைபயிற்சி அல்லது சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சி செய்யும் போது உங்களது வழிகளையும் செல்லும் தூரத்தையும் கண்காணிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி போட் எக்ஸ்ப்ளோரர் சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதி கொண்டிருக்கிறது. இந்த உள்ளமைக்கப்பட்ட ஸ்மார்ட் டிராக்கர் செயல்பாட்டு வசதி மூலம் தங்களது கலோரி எரிப்பு, ஸ்டெப்ஸ் மற்றும் தூரங்களை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி வெளிப்புற ஒட்டம், உட்புற ஓட்டம், வெளிப்புற நடை, வெளிப்புற சைக்கிளிங், உட்புற சைக்கிளிங், ஸ்விமிங் பூல் நீச்சல் மற்றும் உடற்தகுதி உள்ளிட்ட 8 உடற்பயிற்சி பயன்பாட்டு முறைகளை இது கொண்டுள்ளது.

கிளவுட் வாட்ச் அம்சம்

அதுமட்டுமின்றி போட் எக்ஸ்ப்ளோரர் உள்ளமைக்கப்பட்ட நேரடி வானிலை முன்னறிவிப்புகள் மிகவும் சிறந்ததாக இருக்கிறது. இது தற்போதைய வானிலை நிலவரத்தை தெரிவிப்பதோடு, அடுத்த 3 நாட்களுக்கான புதுப்பிப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் ஆகியவற்றை இதில் பெறலாம். வெளிப்புற செயல்களை மேற்கொள்ளும்போது இதன்மூலம் நீங்கள் இயற்கை சூழலை அறிந்துக் கொள்ளளாம். இந்த வாட்ச்சில் தனிப்பயனாக்கப்பட்ட கிளவுட் வாட்ச் முகங்களும் இருக்கிறது.

24x7 இதய துடிப்பு மானிட்டர்

அதுமட்டுமின்றி இதில் 24x7 இதய துடிப்பு மானிட்டர், போட் எக்ஸ்ப்ளோரர் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள், துல்லியமான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு தேவைப்பாடுகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. மூச்சு பயிற்சி ஆற்றல் உங்களை ஏதுவாக வழிநடத்துகிறது. இது இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்த அளவு அதிகமாகும் நேரத்தில் அதை குறைக்க இது உங்களை வழிவகுக்கிறது.

அதுமட்டுமின்றி மியூசிக் ப்ளேபேக் கட்டுப்பாடுகள், அறிவிப்பு எச்சரிக்கைகள் மற்றும் ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்பு, அலாரங்கள், டைமர்கள் போன்ற பல்வேறு அம்சங்களை நிர்வகிக்கும் கட்டுப்பாடுகள் இதில் ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கிறது. மேலும் போட் எக்ஸ்ப்ளோரர் சாதனமானது வியர்வை, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சத்தோடு இருக்கிறது. இந்த அம்சம் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும். இது சிறந்த உடற்பயிற்சி கூட்டாளராகவும் பயன்படுகிறது.

பல்வேறு ஸ்மார்ட்வாட்ச்கள் வரும்

ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் குறித்து போட் இணை நிறுவனர் அமன் குப்தா தெரிவித்த கருத்துகலை பார்க்கையில், இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் இந்த ஆண்டு எங்களுக்கு முக்கிய மையமாக இருக்கிறது. தங்களது வளர்ந்து வரும் வரிசையில் சமீபத்திய கூடுதல் அறிவிப்பாக இந்த எக்ஸ்ப்ளோரரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிட்டார். தங்களது ஸ்மார்ட்வாட்ச் போட்ஃபோலியோவை விரிவுப்படுத்தும் நோக்கில் வெவ்வேறு ஸ்மார்ட்வாட்ச்களை கொண்டிருக்கிறோம். பல்வேறு வடிவமைப்பு முறைகளையும் தாண்டி ஸ்மார்ட்வாட்ச்கள் உடற்பயிற்சி ஆகியவற்றில் மிக கவனம் செலுத்துகின்றன என குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
boAT Going to Launch its SmartWatch with Fitness, Style Focus Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X