Home
Gadgets

பட்ஜெட் விலையில் புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.. விலை இது தான்

ஸ்மார்ட்வாட்ச் மவுசு இந்திய சந்தையில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பிரபல ஆடியோ மற்றும் அக்சஸரீஸ் நிறுவனமான போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் எனும் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் வட்ட வடிவ எல்சிடி கலர் டிஸ்ப்ளேவுடன் டூயல் டோன் சிலிகான் ஸ்டிராப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்..
போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்
இந்த புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் பல்வேறு சென்சார்களுடன் 10 விதமான வெவ்வேறு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோடு உடன் வருகிறது. இதில் உள்ள சென்சார்கள் பிட்னஸ் டிராக்கிங் முதல் துவங்கி பிட்னஸ் தொடர்பான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கேமரா கண்ட்ரோல் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதியுடன் வருகிறது.

புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச் IP68 சான்றிதழ் பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது. முன்பே சொன்னது போல், ரன்னிங், ஜாக்கிங், ஸ்விமிங், வாக்கிங், போன்ற 10 வெவ்வேறு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோடு அம்சத்துடன் வருகிறது. உங்கள் ஸ்மார்ட்போனிற்கு வரும் அனைத்து நோட்டிபிகேஷனும் இனி உங்கள் போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச் இல் தெரியும்.

போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச் 200 எம்ஏஹெச் பேட்டரியுடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு தேவையான ஸ்டான்ட்பை பயனை வழங்குகிறது. புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ மற்றும் விவிட் ரெட் நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரத்தியேக விற்பனை அமேசான் தளத்தில் துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
Boat Flash Watch launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X