போட் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் வாட்ச்: என்னென்ன அம்சங்கள்.! என்ன விலை?
போட் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் நல்ல தரமான ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்வதால் அதிக இடங்களில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச்
இந்நிலையில் போட் நிறுவனம் பிளாஷ் எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆனது வட்ட வடிவ எல்சிடி கலர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் விலை
ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ மற்றும் விவிட் ரெட் போன்ற நிறங்களில் இந்த போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.2,499-ஆக உள்ளது. குறிப்பாக அமேசான் வலைத்தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை வாங்க முடியும்.

பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் 10 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள்
குறிப்பாக இந்த பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மெல்லிய மெட்டாலிக் டிஸ்ப்ளே, டூயல் டோன் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தில் உள்ள சென்சார்கள் பிட்னஸ் டிராக்கிங் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது. பின்பு பல்வேறு சென்சார் வசதிகள் இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இது தவிர 10 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் இந்த பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் உள்ளன.

பிளாஸ் ஸ்மார்ட் வாட்ச் பேட்டரி
இந்த புதிய பிளாஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது மியூசிக் கண்ட்ரோல் வசதி, வாட்ச் கேமரா மற்றும் நோட்டிபிகேஷன் ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு 200 எம்ஏஎச் பேட்டரி வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு தேவையான ஸ்டான்ட்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ பேண்ட் ஸ்டைல்
மேலும் போட் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் உள்ள அம்சங்களை விட ஒப்போ நிறுவனம்அறிமுகம் செய்த ஒப்போ பேண்ட் ஸ்டைல் சாதனத்தில் தனித்துவமான அம்சங்கள் உள்ளது அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ பேண்ட் ஸ்டைல் டிஸ்பிளே
புதிய ஒப்போ பேண்ட் ஸ்டைல் 1.1 இன்ச் கலர் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது, இது Mi பேண்ட் 5 போன்றது. இது பயனர்களின் இரத்த செறிவு அளவை (SpO2) தொடர்ந்து கண்காணிக்கும், மேலும் குறிப்பாக, 8 மணிநேர தூக்க காலத்தில் பேண்ட் 28,800 முறை SpO2 அளவை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ பேண்ட் ஸ்டைல் நிகழ் நேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்கக் கண்காணிப்புடன் வருகிறது.

ஒப்போ பேண்ட் ஸ்டைல் விலை
பயனர்கள் ஏதேனும் தூக்கச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்களா என்பதைக் கண்டறியும் வகையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒப்போ கூறியுள்ளது. இந்த புதிய பிட்னஸ் பேண்ட் 12 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோடு உடன் வெளிவந்துள்ளது. பயனர்களின் அனைத்து முன்னேற்றங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஹெய்டாப் ஹெல்த் (HeyTap Health) பயன்பாட்டில் சேமிக்கப்படும்.
இது 5ATM சான்றிதழ் பெற்ற வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வெளிவருகிறது. Oppo Band Style கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் நோட்டிபிகேஷன், கேமரா கண்ட்ரோல், வெதர் ரிப்போர்ட், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்களுடன் ப்ளூடூத் வேர்சின் 5.0 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு சாதனங்களுடன் இணக்கமாகிறது. இந்த புதிய சாதனம் இந்தியச் சந்தையில் ரூ.2,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்ப கால விற்பனையில் வெறும் ரூ.2,799 என்று விலையில் கிடைக்கிறது


Click it and Unblock the Notifications