Home
Gadgets

இதுதான் பட்ஜெட்.. வெறும் ரூ.1999 போதும்.. HD டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. 390mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டின் மெட்டாலிக் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை பட்ஜெட்டில் மிரளவிடும் விதமாக போட் எனிக்மா ஓரியன் (boAt Enigma Orion) மாடல் களமிறங்கி இருக்கிறது. எச்டி டிஸ்பிளே, வாட்டர் ரெசிஸ்டன்ட், ப்ளூடூத் காலிங், ஆக்டிவிட்டி டிராக்கர், ஹெல்த் மானிட்டர் போன்ற வழக்கமான பீச்சர்கள் மட்டுமல்லாமல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், ஆப் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. இந்த போட் எனிக்மா ஓரியன் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போட் எனிக்மா ஓரியன் அம்சங்கள் (boAt Enigma Orion Specifications): இந்த போட் மாடலானது, மெட்டாலிக் பாடி மற்றும் ஸ்ட்ராப் கொண்ட வாட்ச்களில் ஸ்மார்ட் பீச்சர்களையும் பேக் செய்து அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. நேவிகேஷனுக்காக ஃபங்கஷ்னல் கிரவுண் (Functional Crown) வருகிறது. IP67 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது.

இதுதான் பட்ஜெட்! ரூ.1999 போதும்.. HD டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங் மாடல்!

ஆகவே, டிசைனில் பின்னிப் பெடல் எடுத்துள்ளது. ரவுண்ட் டயல் டிசைனில் (Round Dial Design) 1.39 இன்ச் (320 × 320 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. ரொசொலூஷனில் பக்கா அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளேவில் 100 கிளவுட் வாட்ச் பேஸ்கள் (Cloud Watch Faces) வருகின்றன. வழக்கமான ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது.

இதுபோக கான்டாக்ட்ஸ் (Contacts) மற்றும் டயல் பேட் (Dial Pad) வருகிறது. கிரவுண் மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். ப்ளூடூத் காலிங் செய்து கொள்ள பில்ட்-இன் மைக்ரோபோன் (Built-in Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. ரன்னிங் (Running), வாக்கிங் (Walking), ஜாக்கிங் (Jogging) போன்ற மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகிறது.

இந்த மோட்களுக்காக டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker) வருகிறது. ஆகவே, ரன்னிங், வாக்கிங் உள்ளிட்ட டேட்டாக்களை தெரிந்து கொள்ளலாம். இந்த போட் எனிக்மா ஓரியன் மாடலில் செடென்டரி அலர்ட்ஸ் (Sedentary Alerts) சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டிலும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) வருகிறது.

ஆகவே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Siri Voice Assitant) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த போட் எனிக்மா ஓரியன் மாடலில் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவலுக்காக (Blood Oxygen Levels) எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) வருகிறது. இதுபோக ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker) வருகிறது.

இந்த டிராக்கர் மூலம் ஸ்லீப் குவாலிட்டி மற்றும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ஹெல்த் டேட்டா, ஆக்டிவிட்டி டேட்டா போன்றவற்றுக்காக பிரத்யேகமாக கிரெஸ்ட் ஆப் (Crest App) சப்போர்ட் வருகிறது. அதேபோல போட் காய்ன்ஸ் (boAt Coins) கிடைக்கிறது. இந்த போட் மாடலில் 390mAh பேட்டரி வருகிறது. நார்மல் மோடில் (Normal Mode) 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

அதேபோல ப்ளூடூத் காலிங் மோடில் 2 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். 2 மணி நேரங்களுக்குள் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். யுஎஸ்பி மேக்னடிக் சார்ஜிங் கேபிள் வருகிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் வெதர் அப்டேட் (Weather Update) வருகிறது.

இந்த போட் எனிக்மா ஓரியன் மாடலின் ஆக்டிவ் பிளாக் (Active Black) வேரியண்ட்டின் விலை ரூ.1,999ஆக இருக்கிறது. அதேபோல மெட்டல் பிளாக் (Metal Black) மற்றும் மெட்டல் சில்வர் (Metal Silver) வேரியண்ட்டின் விலை ரூ.2,199ஆக இருக்கிறது. போட்-லைப்.காம் (boAt-lifestyle.com), அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Enigma Orion With Bluetooth Calling 7 Days Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X