Home
Gadgets

பிரிச்சு விட்டாப்ல.. பட்ஜெட் அப்படி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. 5 நாட்கள் பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் மெட்டாலிக் லுக்கில் அமோலெட் டிஸ்பிளே, 5 நாட்கள் பேட்டரி பேக்கப், ப்ளூடூத் காலிங், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்போர்ட்ஸ் மோட்ஸ், ஆப் சப்போர்ட், லோகோஷன் டிராக்கிங், கேமரா கன்ட்ரோல் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் போட் எனிக்மா ஜெம் (boAt Enigma Gem) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது. இதேபோல பீச்சர்களுடன் போட் எனிக்மா டேஸ் (boAt Enigma Daze) மாடலும் களமிறங்கி இருக்கிறது. இந்த மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போட் எனிக்மா ஜெம் அம்சங்கள் (boAt Enigma Gem Specifications): இந்த ஜெம் மாடலானது, மெட்டாலிக் பாடி மற்றும் ஸ்ட்ராப் டிசைனில் கிடைக்கிறது. 1.19 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ரவுண்ட் டயல் டிசைனில் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-On Display) சப்போர்ட் கிடைக்கிறது. கிரவுண் கன்ட்ரோல் கிடைக்கிறது.

பிரிச்சு விட்டாப்ல.. பட்ஜெட் அப்படி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் கால்!

இந்த போட் எனிக்மா ஜெம் மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) மற்றும் டயல் பேட் (Dialpad) சப்போர்ட் வருகிறது. இந்த டயல்பேடில் 20 கான்டாக்ட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. டிஐஒய் வாட்ச்பேஸ் ஸ்டூடியோ (DIY Watchface Studio) மூலம் வாட்ச் பேஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்கள் சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor) வருகிறது. மேலும், ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) மற்றும் மென்சுரல் டிராக்கிங் (Menstrual Tracking) சப்போர்ட் உள்ளது. எஸ்ஓஎஸ் (SOS) சப்போர்ட் உள்ளது.

கூடவே, லோகேஷன் டிராக்கிங் (Location Tracking) இருக்கிறது. இந்த இந்த போட் எனிக்மா ஜெம் மாடலில் 5 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங் போன்ற 700+ ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Active Sports Modes) வருகின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் போட் கிரெஸ்ட் ஆப் (boAt Crest App) பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்மார்ட் பீச்சர்களை பொறுத்தவரையில், டிஎன்டி (DND), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் ஃபைண்ட் மை போன் (Find My Phone) சப்போர்ட் உள்ளது. யுடிலிட்டியை பார்க்கையில், ஃபிளாஷ் லைட் (Flashlight), அலாரம் (Alarms), டைமர் (Timer) ஆகிய பீச்சர்கள் வருகின்றன. 1 வருட வாரண்டி வருகிறது.

போட் எனிக்மா டேஸ் அம்சங்கள் (boAt Enigma Daze Specifications): இந்த போட் மாடலில் மெட்டாலிக் ஸ்ட்ராப் மட்டுமல்லாமல், சிலிகான் ஸ்ட்ராப் கிடைக்கிறது. 1.3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கன்ட்ரோல் கிரவுண் வருகிறது. வாட்ச் பேஸ் ஸ்டூடியோ இருக்கிறது. இதில் 5 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வருகிறது. ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன.

பிரிச்சு விட்டாப்ல.. பட்ஜெட் அப்படி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் கால்!

டிசைனை தவிர மற்ற பீச்சர்கள் முந்தைய மாடலில் பார்த்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர் முதல் ஸ்லீப் டிராக்கர், மென்சுரல் டிராக்கர் மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் வரையில் கிடைக்கிறது. 700+ ஆக்டிவ் ஸ்போர்ட் மோட்கள், ப்ளூடூத் காலிங் மற்றும் டயல் பேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

போட் எனிக்மா ஜெம் மாடலின் விலை ரூ. 2,699ஆக இருக்கிறது. மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் கிடைக்கிறது. போட் எனிக்மா டேஸ் மாடலின் விலை ரூ.2,199ஆக இருக்கிறது. மெட்டாலிக் சில்வர், மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் கோல்டு மற்றும் செர்ரி பிளாசம் கலர்களில் கிடைக்கிறது. போட் தளத்தில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Enigma Gem With AMOLED Display 5 Days Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X