அள்ளி கொடுக்கும் அமேசான்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
போட் நிறுவனத்தின் போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் (boAt CineHead M1 Projector) மாடல் தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 150 இன்ச் வரை புரோஜெக்சன் (Projection), ஆண்ட்ராய்டு ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போட் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்தது. இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அமேசானில் போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.649 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (boAt CineHead M1 Projector Specifications): 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவு கொண்டுள்ளது போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல். எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். அதுவும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போட் நிறுவனம்.
200 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (ANSI lumens brightness) கொண்டுள்ளது இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல். ஆகவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த போட் ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மூலம் 30 இன்ச் முதல் 150 இன்ச் வரை புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 85 இன்ச், 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆண்ட்ராய்டு 12 (Android 12) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் பிலட்-இன் ஆப் ஸ்டோர் (built-in app store) ஆதரவும் உள்ளது. பயனர்கள் இதில் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் யூடியூப் போன்ற பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ்,மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என போட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் (Adjustable Stand) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் டூயல் 3W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
மேலும் யுஎஸ்பி (USB) போர்ட், எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு ஆடியோ அவுட், ப்ளூடூத், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. இந்த ப்ரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர லேம்ப் லைஃப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications