Home
Gadgets

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. செம ஆஃபரில் boAt 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இன்று அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival 2026 Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் போட் (boAt) நிறுவனத்தின் தரமான 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அமேசானில் நடைபெறும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எனும் சிறப்பு விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போட் சினிஹெட் எப்1 ப்ரொஜெக்டர் (Boat CineHead F1 Projector) மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை ரூ.16999 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. செம ஆஃபரில் boAt 4கே ப்ரொஜெக்டர்..

போட் சினிஹெட் எப்1 அம்சங்கள் (Boat CineHead F1 Projector Specifications): போட் சினிஹெட் எப்1 மாடல் 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் (1080p Full HD native resolution) மற்றும் 4K சப்போர்ட் உடன் வெளியானது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் போட் சினிஹெட் எப்1 மாடலில் 300 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி மற்றும் 1000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல்கள் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போட் நிறுவனம்.

அதுவும் கூகுள் டிவி 5.0 (Google TV 5.0) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போட் சினிஹெட் எப்1 மாடல் வெளிவந்துள்ளது. ஆகவே கூகுள் ப்ளே ஸ்டோர், குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.

இந்த போட் சினிஹெட் எப்1 மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது.

குறிப்பாக நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற அனைத்து ஓடிடி ஆப்களை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும். கூகுள் காஸ்ட் மற்றும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய போட் சினிஹெட் எப்1 மாடல்.

ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus), intelligent அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் போன்ற வசதிகள் இந்த புதிய போட் சினிஹெட் எப்1 மாடலில் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் இந்த புதிய போட் ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது.

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. செம ஆஃபரில் boAt 4கே ப்ரொஜெக்டர்..

தரமான மீடியாடெக் பிராசஸர் உடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio)ஆதரவு கொண்ட 6W ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த மாடலில் ஷீல்டு என்ஜின் (Sealed Engine) கொடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இது சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்கும்.

மேலும் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் போட் சினிஹெட் எப்1 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் (Adjustable Stand) ஆதரவு கொண்டுள்ளது போட் சினிஹெட் எப்1 மாடல்.

Best Mobiles in India

English summary
boAt Cinehead M1 Projector available at 33 percent discount in Amazon Great Indian Festival sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X