வீட்டுக்குள் ஒரு 4K மினி தியேட்டர்.. 120 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?
போட் (boAt) நிறுவனம் இந்தியாவில் போட் சினிஹெட் எப்1 ப்ரொஜெக்டர் (Boat CineHead F1 Projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு, 4கே சப்போர்ட், கூகுள் டிவி ஓஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய போட் ப்ரொஜெக்டர் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போட் சினிஹெட் எப்1 அம்சங்கள் (Boat CineHead F1 Projector Specifications): 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் (1080p Full HD native resolution) மற்றும் 4கே சப்போர்ட் உடன் போட் சினிஹெட் எப்1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

போட் சினிஹெட் எப்1 மாடலில் 300 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி மற்றும் 1000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல்கள் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போட் நிறுவனம்.
கூகுள் டிவி 5.0 (Google TV 5.0) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போட் சினிஹெட் எப்1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே கூகுள் ப்ளே ஸ்டோர், குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.
போட் சினிஹெட் எப்1 மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது.
நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற அனைத்து ஓடிடி ஆப்களை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும். கூகுள் காஸ்ட் மற்றும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய போட் சினிஹெட் எப்1 மாடல்.
ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus), intelligent அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் போன்ற வசதிகள் இந்த புதிய போட் சினிஹெட் எப்1 மாடலில் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் இந்த புதிய போட் ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது.
மீடியாடெக் பிராசஸர் உடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio)ஆதரவு கொண்ட 6W ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த மாடலில் ஷீல்டு என்ஜின் (Sealed Engine) கொடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இது சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்கும்.

டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போட் சினிஹெட் எப்1 மாடல் வெளியாகி உள்ளன. குறிப்பாக அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் (Adjustable Stand) ஆதரவுடன் போட் சினிஹெட் எப்1 மாடல் வெளியாகி உள்ளது.
போட் சினிஹெட் எப்1 மாடலின் விலை ரூ23,999-ஆக உள்ளது. தற்போது அமேசான் தளத்தில் இந்த சாதனம் வாங்க கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications