அடிச்சான் பாரு boAt.. ரூ.7499 பட்ஜெட்ல 150 இன்ச்.. ஆண்ட்ராய்டு OS.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?
போட் (boAt) நிறுவனம் இந்தியாவில் போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் (boAt CineHead E1 Projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது புதிய போட் ப்ரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (boAt CineHead E1 Projector Specifications): 720P நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 1080P ரெசல்யூஷன் ஆதரவுடன் புதிய போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது, குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும். அதுவும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போட் நிறுவனம்.

அதேபோல் 150 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (150 ANSI lumens brightness) கொண்டுள்ளது இந்த போட் போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் மாடல். ஆகவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த போட் ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் மூலம் 150 இன்ச் வரை புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போட் போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. மேலும் பில்ட்-இன் ஆப் ஸ்டோர் (built-in app store) ஆதரவும் உள்ளது. பயனர்கள் இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் யூடியூப் போன்ற பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
வெர்டிகல் ஸ்கிரீன் கரெக்சன் (Automatic Vertical Screen Correction) ஆதரவுடன் இந்த அசத்தலான போட் ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ்,மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என போட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட், ப்ளூடூத், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் ப்ரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர லேம்ப் லைஃப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரொஜெக்டர் மாடலில் டூயல் 3W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் (Adjustable Stand) உடன் இந்த புதிய ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது.
போட் சினிஹெட் இ1 ப்ரொஜெக்டர் மாடலின் விலை ரூ.7499-ஆக உள்ளது. அமேசான் தளத்தில் இந்த புதிய சாதனம் விற்பனைக்கு வருகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போட் ப்ரொஜெக்டர் கம்மி பட்ஜெட்டில் வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








