எல்லாமே இருக்கு.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 300mAh பேட்டரி.. ASAP சார்ஜிங்.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 300mAh பேட்டரி, ஏஎஸ்ஏபி சார்ஜிங், IP68 ரேட்டிங், ஆட்டோ ஆக்டிவிட்டி டிடெக்சன், ஹெல்த் மானிட்டர்கள், ப்ளூடூத் காலிங் போன்ற பக்கா பீச்சர்களுடன் போட் குரோம் ஹரிசோன் (boAt Chrome Horizon) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் மெட்டல் பாடி, வீடியோ வாட்ச் பேஸ் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது.
இந்த போட் குரோம் ஹரிசோன் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். சிலிகான், லெதர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் மற்றும் பிரீமியம் மெட்டல் பாடி கிடைக்கிறது. இதில் ஃபங்ஸ்னல் குரோவ்ண் (Functional Crown) மற்றும் கன்ட்ரோல் பட்டன் கிடைக்கிறது. இந்த டிசைனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), ராயல் ப்ளூ (Royal Blue), ஸ்டீல் பிளாக் (Steel Black) மற்றும் கோகோ பிரவுண் (Coco Brown) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன.

2.5D கர்வ் கிளாஸ் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, பில்ட் குவாலிட்டி மற்றும் டிசைனில் மிட்-பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்களை பார்க்க முடிகிறது. இப்போது, டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், பேட்டரி மற்றும் யூடிலிட்டி பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
போட் குரோம் ஹரிசோன் அம்சங்கள் (boAt Chrome Horizon Specifications): இந்த போட் மாடலில் 600 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கொண்ட 1.51 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் வழக்கமாக கிடைக்கும் வாட்ச் பேஸ்கள் மட்டுமல்லாமல், வீடியோ வாட்ச் பேஸ்கள் (Video Watch Faces), போட்டோ ஸ்லைட்ஷோ (Photo Slideshow) கிடைக்கிறது.
இதுபோக வேக் கெஸ்ச்சர் (Wake Gesture) மற்றும் அனிமேடெட் வாட்ச் பேஸ்கள் (Animated Watch Faces) சப்போர்ட் வருகிறது. இந்த போட் குரோம் ஹரிசோன் மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் கிடைக்கிறது. ஆகவே, டயல் பேட் மற்றும் கான்டாக்ஸ்ட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆட்டோ ஆக்டிவிட்டி டிடெக்சன் (Auto Activity Detection) உள்ளது.
ஆகவே, 100+ ஸ்போர்ட்ஸ் மோட்களில் ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற முக்கிய மோட்கள் ஆட்டோமெட்டிக்காக ரிககனைஸ் செய்து கொள்ளப்படும். போட் கிரெஸ்ட் ஆப் (boAt Crest App) மூலம் எச்ஆர்வி (HRV), விஓ2 மேக்ஸ் (VO2 Max) போன்ற ஹெல்த் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) வருகிறது.
மேலும், மெச்சுரல் டிராக்கர் (Menstrual Tracker), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஸ்ட்ரெஸ் டிராக்கர் (Stress Tracker) மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracker) கிடைக்கிறது. இந்த போட் குரோம் ஹரிசோன் மாடலின் பேட்டரியை பார்க்கையில், 7 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படி 300mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு ஏஎஸ்ஏபி (ASAP) சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த சார்ஜிங் மூலம் 45 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், மியூசிக்/கேமரா கன்ட்ரோல், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், ஃபைண்ட் மை போன், வெதர் போன்ற மல்டிபிள் யூலிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த போட் குரோம் ஹரிசோன் மாடலின் சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.2,799ஆக இருக்கிறது.
அதேபோல லெதர் மற்றும் மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.3,099ஆக இருக்கிறது. போட்-லைப்ஸ்டைல் வெப்சைட் மட்டுல்லாமல், அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்களுடன் ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








