Home
Gadgets

மிரளவிடும் boAt ஸ்மார்ட்வாட்ச்.. AMOLED டிஸ்பிளே.. AI கோச்.. AUTO ஹாட் ரேட்.. IP68 ரெசிஸ்டன்ஸ்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் போட் நிறுவனத்தின் போட் குரோம் எண்டேவர் (boAt Chrome Endeavour) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது. பிரீமியம் பீச்சர்களை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு மீடியம் பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மட்டுமல்லாமல், ஏஐ கோச், ஆட்டோ ஹார்ட் ரேட் மானிட்டர் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த போட் குரோம் எண்டேவர் ஸ்மார்ட்வாட்ச்சின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இயர்பட்ஸ், ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் போட் நிறுவனம் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்களை பட்ஜெட் விலை கொண்ட மாடல்களிலேயே போட் நிறுவனம் கொடுத்து வருகிறது. இப்போது, போட் குரோம் எண்டேவர் மாடலிலும் அதை செய்து கஸ்டமர்களை தட்டித் தூக்கி இருக்கிறது.

மிரளவிடும் boAt ஸ்மார்ட்வாட்ச்.. AMOLED டிஸ்பிளே.. AI கோச்.. மாடல்?

மெட்டல் பாடியில் ஹை-குளோஸ் ஃபினிஷிங் கொடுக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியும் எதிர்பார்க்கலாம். ரேட்டேட்டிங் குரோவ்ன் மற்றும் பட்டன் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஸ்டீல் ஸ்ட்ராப், லெதர் ஸ்ட்ராப் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் என்று மல்டிபிள் ஸ்ட்ராப் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதேபோல மல்டிபிள் கலர்களிலும் கிடைக்கிறது.

போட் குரோம் எண்டேவர் அம்சங்கள் (boAt Chrome Endeavour Specification): இந்த போட் மாடலில் 1.96 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அட்வான்ஸ்டு எஸ்1 (S1) சிப்செட் கிடைக்கிறது. ஹெல்த் மானிட்டர்களுக்காக ஏஐ கோச் (AI Coach) கிடைக்கிறது.

மேலும், எச்ஆர்வி (HRV) மற்றும் விஓ2 மேக்ஸ் (VO2 Max) மானிட்டரிங் கிடைக்கிறது. ஆகவே, பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் பேக் செய்துள்ளது. இதில் ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring) மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் (Stress Monitoring) கிடைக்கிறது. ஸ்லீப் டிராக்கிங் உள்ளது.

இதுபோக ஆட்டோ ஆக்டிவிட்டி டிடெக்சன் கிடைக்கிறது. இதன் மூலம் ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற ஆக்டிவிட்டிகளை ஆட்டோ மானிட்டர் செய்யலாம். அதேபோல ஹார்ட் ரேட் மானிட்டரும் ஆட்டோவாக கிடைக்கிறது. டைனாமிக் வாட்ச் பேஸ்கள், அட்வான்ஸ்டு அலெர்ட்கள் இதில் கிடைக்கின்றன.

இந்த போட் குரோம் எண்டேவர் மாடலில் IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர், ஸ்வெட் மற்றும டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட ரக்கட் மாடலாகவே டியூரபிலிட்டி கொடுக்க இருக்கிறது. ஏனென்றால், இதில் மெட்டாலிக் பாடி கிடைக்கிறது. இப்போது, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆக்டிவ் பிளாக் (Active Black), செர்ரி பிளாசம் (Cherry Blossom) ஆகிய கலர்கள் கொண்ட வேரியண்ட்களின் விலை ரூ.3,299ஆக இருக்கிறது. அதேபோல ஸ்டீல் பிளாக் (Steel Black), மேக்னடிக் ப்ளூ (Magnetic Blue), ப்யூஷன் ப்ளூ (Fusion Blue) மற்றும் கோகோ பிரவுன் (Cocoa Brown) கலர்கள் கொண்ட வேரியண்ட்களின் விலை ரூ.3,799ஆக இருக்கிறது.

இதில் ஸ்டீல் பிளாக் கலர் வேரியண்ட்டின் மெட்டாலிக் ஸ்ட்ராப் (Metalic Strap) கிடைக்கிறது. அதேபோல கோகோ பிரவுன் கலர் வேரியண்ட்டில் லெதர் ஸ்ட்ராப் (Leather Strap) கிடைக்கிறது. மேலும், ப்யூஷன் ப்ளூ வேரியண்ட்டில் நைலான் ஸ்ட்ராப் (Nylon Strap) கிடைக்கிறது. மற்ற வேரியண்ட்களில் சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) கிடைக்கிறது.

இந்த கலர் மற்றும் ஸ்ட்ராப் வேரியண்ட்களை அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல போட் வெப்சைட் மூலமும் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், ரீடெயில் அவுட்லெட்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Chrome Endeavour With S1 Processor IP68 Resistance Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X