Home
Gadgets

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ஸ்பாஷியல் ஆடியோ.. மல்டி கனெக்டிவிட்டி.. நாய்ஸ் ரெடக்சன்.. 400mAh பேட்டரி!

ஆடியோ பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக கம்மி பட்ஜெட்டில் ஆப் சப்போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங், 400mAh பேட்டரி, ஸ்பாஷியல் ஆடியோ, நாய்ஸ் ரெடக்சன் போன்ற பீச்சர்களுடன் போட் ஏர்டோப்ஸ் சுப்ரீம் (boAt Airdopes Supreme) இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போட் ஏர்டோப்ஸ் சுப்ரீம் அம்சங்கள் (boAt Airdopes Supreme Specifications): இந்த போட் மாடலானது, பட்ஜெட்டிலும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. மேட் டிசைனில் ஸ்போர்டி ப்ளூ (Sporty Blue), கிளாசிக் பிளாக் (Classic Black) மற்றும் ஸ்வீடிஷ் ஒயிட் (Swedish White) ஆகிய 3 கலர்கள் கொண்டிருக்கிறது.

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ஸ்பாஷியல் ஆடியோ.. மல்டி கனெக்டிவிட்டி!

இந்த போட் ஏர்டோப்ஸ் சுப்ரீம் TWS வேரியண்ட்டில் 10 மிமீ டிரைவர்கள் (Drivers) வருகின்றன. ஏஐ ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (AI ENx Technology) சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் காலிங் அனுபவத்துக்கான விண்ட் நாய்ஸ் ரெடக்சன் (Wind Noise Reduction) சப்போர்ட் கொண்ட குவாட் மைக்ஸ் (Quad Mics) வருகிறது.

ப்ளூடூத் வி.5 (Bluetooth v5.2) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட்டுக்காக 24-பிட் ஆடியோ ப்ராசஸிங் டெக்னாலஜி (24-Bit Audio Processing Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கும்படி 65எம்எஸ் லோவ் லேட்டன்சி (65ms Low Latency) வருகிறது.

பீஸ்ட் மோட் (BEAST Mode) சப்போர்ட் உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் இன்-இயர் டிடெக்சன் (In-Ear Detection) கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் நொடியில் கனெக்ட் செய்வதற்காக இன்ஸ்டா-வேக்-பேர் டெக் (IWP Tech) வருகிறது. இதன் கேஸில் 400mAh பேட்டரி வருகிறது.

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ஸ்பாஷியல் ஆடியோ.. மல்டி கனெக்டிவிட்டி!

அதேபோல இயர்பட்களில் தலா 35mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 50 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்க முடியும். அதேபோல ஏஎஸ்ஏபி சார்ஜ் (ASAP Charge) சார்ஜ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 150 நிமிடங்களுக்கு பிளேபேக் டைம் (Playback Time) கிடைக்கும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் சுப்ரீம் மாடலில் மல்டிபாய்ட் கனெக்டிவிட்டி சப்போர்ட் (Multipoint Connectivity Support) வருகிறது. அதுமட்டுமல்லாமல், கூகுள் ஃபாஸ்ட் பேர் சர்வீஸ் (Google Fast Pair Service) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதை போட் இயரபிள்ஸ் ஆப் (boAt Hearables App) மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

IPX4 தர ஸ்பிளாஷ் & ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Splash & Sweat Resistance) வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெறும் ரூ.1,299 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் சுப்ரீம் இயர்பட்ஸ் மாடலை போட் வெப்சைட் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.

ரூ.1,500க்கும் கம்மியான பட்ஜெட்டில் லோவ் லேட்டன்சி மோட், நல்ல பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த போட் ஏர்டோப்ஸ் சுப்ரீம் டிடபுள்யூ இயர்பட்ஸ் மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes Supreme With 400mAh Battery, Spatial Audio Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X