Home
Gadgets

சிங்கிள் சார்ஜில் 52 மணி நேர பிளேபேக்.. பீஸ்ட் மோடில் boAt ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப்.. விலை எப்படி?

மியூசிக் பிரியர்கள் மட்டுமல்லாமல், புதுவித டிசைனை விரும்பும் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் (boAt Airdopes ProClip) இயர்பட்ஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் 52 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. பிரைவேட் மோட், பீஸ்ட் மோட் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் மாடலின் விவரங்களை பார்க்கலாம்.

கிளவுட் ஃபிட் (Cloud Fit) டிசைனில் புதுவித லுக் கொடுக்கிறது. மேட் பினிஷிங் கிடைப்பதால், அல்ட்ரா பிரீமியம் பீல் கொடுக்கிறது. சார்ஜிங் கேஸில் எல்இடி இன்டிகேட்டர் கிடைக்கிறது. சாடின் ஒயிட் (Satin White), சில்க் கிரே (Silk Grey) மற்றும் வெல்வெட் வைன் (Velvet Wine) ஆகிய கலர்களை கொண்டுள்ளது. இந்திய மார்கெட்டில் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.

சிங்கிள் சார்ஜில் 52 மணி நேர பிளேபேக்.. பீஸ்ட் மோடில் boAt ஏர்டோப்ஸ்!

போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் அம்சங்கள் (Boat Airdopes ProClip Specifications): 12 எம்எம் ஹை-பர்ஃபாமென்ஸ் டிரைவர்கள் கிடைக்கின்றன. டீடெயில்டு ஆடியோ மற்றும் கிரிஸ்டல் கிளியர் கிளாரிட்டியை எதிர்பார்க்கலாம். ஏஐ-ஈஎன்எக்ஸ் (AI-ENx) என்று சொல்லக்கூடிய ஏஐ என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் ஏற்படும் நாய்ஸ்களை கன்ட்ரோல் செய்து கிளியர் ஆடியோவை இந்த போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் கொடுக்கும். ஆப் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, ஈகியூ (EQ) உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். மல்டி கனெக்டிவிட்டி (Multi Connectivity) கொண்ட மாடலாக இந்த போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் இருக்கிறது.

ஆகவே, ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு டிவைஸில் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஐபிஎக்ஸ்4 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் & ஸ்வெட் (Splash & Sweat) ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. கால்கள், மியூசிக் மட்டுமல்லாமல், ரீமைண்டர்கள் (Reminders), நேவிகேஷன் (Navigation) சப்போர்ட் கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

சார்ஜிங் கேஸில் 500mAh பேட்டரி இருக்கிறது. இயர்பட்களில் 50mAh பேட்டரி கிடைக்கிறது. சிங்கிள் சார்ஜில் 52 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் தேவைப்படும். இயர்பட்களை ஃபுல் சார்ஜ் செய்ய 50 நிமிடங்கள் எடுக்கும். மேலும், ஏஎஸ்ஏபி (ASAP) சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் இருக்கிறது.

மினிமல் சவுண்ட் லீக்கேஜ் கொடுக்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்மார்ட் சோனிக் (Smart Sonic Seal) சப்போர்ட் கிடைக்கிறது. போட் மாடல்களில் கிடைக்கும் போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு பீஸ்ட் மோட் (Beast Mode) கிடைக்கிறது. ஆகவே, 55எம்எஸ் அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra Low Latency) கொடுக்கப்பட்டு உள்ளது.

போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் விலை (Boat Airdopes ProClip Price): இந்த ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் மாடலின் விலை ரூ.1,599ஆக இருக்கிறது. போட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஒயிட், கிரே, வைன் ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
boAt Airdopes ProClip With 52 Hours Playback on Single Charge Launched in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X