புரட்டிப்போட்ட பட்ஜெட்.. ரூ.1,999 போதும்.. ANC பட்ஸ்.. 50 மணி நேர பிளேபேக்.. ஸ்பாஷியல் ஆடியோ.. எந்த மாடல்?
இந்த பட்ஜெட்டில் இவ்வளவு பீச்சர்களாக என்று மூக்கில் விரல் வைக்கும்படி ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பாஷியல் ஆடியோ, 50 மணி நேர பிளேபேக், ஏஎஸ்ஏபி சார்ஜிங், மல்டி பாய்ன்ட் கனெக்டிவிட்டி, இன்-இயர் டிடெக்சன், கூகுள் ஃபாஸ்ட் பேர் போன்ற பீச்சர்களுடன் போட் ஏர்டோப்ஸ் பிரைம் 701 ஏஎன்சி (boAt Airdopes Prime 701 ANC) மாடல் வெளியாகி இருக்கிறது. கேமிங் லோவ் லேட்டன்சி, அடாப்டிவ் ஈகியூ போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிடும் இந்த மாடலின் விவரங்கள் இதோ.
பிரீமியம் மாடல்களை போல மெட்டாலிக் பினிஷிங் லுக் கொடுக்கிறது. டூயல்-டோன் சார்ஜிங் கேஸ் வருகிறது. இந்த கேஸில் 500mAh பேட்டரி மற்றும் பட்களில் 35mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த டிசைனில் ஜின்க் ஒயிட் (Zinc White), அப்சிடியன் கிரே (Obsidian Grey) மற்றும் டைட்டானியம் ப்ளூ (Titanium Blue) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன.

போட் ஏர்டோப்ஸ் பிரைம் 701 அம்சங்கள் (boAt Airdopes Prime 701 Specifications): இந்த ஏர்டோப்ஸ் மாடலில் 46dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கொண்ட பட்கள் கிடைக்கின்றன. காம்பாக்ட் டிசைனில் 10 எம்எம் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதில் இன்-இயர் டிடெக்சன் (In-ear Detection) கிடைக்கிறது.
ஆகவே, பிளக்-இன் செய்தால் பிளே மற்றும் பிளக்-அவுட் செய்தால் பாஸ் செய்து கொள்ளும். வாய்ஸ் கால்களுக்காக ஏஐ ஈஎன்எக்ஸ் (AI ENx) சப்போர்ட் கொண்ட 4 மைக்குகள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த போட் ஏர்டோப்ஸ் பிரைம் 701 ஏஎன்சி மூலம் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்கள் (Crystal Clear Voice Calls) அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.
சினிமாடிக் லெவல் ஆடியோவுக்கு போட் ஸ்பாஷியல் ஆடியோ (boAt Spatial Audio) கிடைக்கிறது. மிமி பவர்ட் அடாப்டிவ் ஈகியூ (Adaptive EQ) கிடைக்கிறது. அதேபோல கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair), ஃபைண்ட் இயர்பட்ஸ் (Find Eardbuds) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. போட் ஹியரபிள்ஸ் ஆப் (boAt Hearables App) மூலம் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ஆப் மூலம் மல்டி பாய்ன்ட் கனெக்டிவிட்டி (Multipoint Connectivity), டச் கன்ட்ரோல் (Touch Control), நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation), ஸ்பாஷியல் ஆடியோ மற்றும் ஈகுவலைசர் (Equalizer) ஆகிய கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். 500mAh பேட்டரி கொண்ட கேஸ் மற்றும் தலா 35mAh பேட்டரி கொண்ட பட்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 50 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் பிரைம் 701 ஏஎன்சி மாடலுக்கு ஏஎஸ்ஏபி சார்ஜிங் (ASAP Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 180 நிமிடங்களுக்கு பிளேடைம் கிடைக்கும். டைப்-சி சார்ஜிங் போர்ட் பேக் செய்துள்ளது.
கேமிங் பிரியர்களுக்காக பீஸ்ட் மோட் (BEAST Mode) கிடைக்கிறது. இந்த மோட் மூலம் 60ms லோவ் லேட்டன்சியில் ஆடியோ/வீடியோ சிங்க் கிடைக்கும். ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி பிரியர்களுக்கு ஏற்ப IPX5 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 10 மீட்டர்கள் ரேஞ்ச் கொடுக்கும்படி ப்ளூடூத் வி5.2 (Bluetooth V5.2) கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த போட் ஏர்டோப்ஸ் பிரைம் 701 ஏஎன்சி மாடலின் விலை ரூ.1,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon), போட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், அதனுடன் அதிக பேட்டரி கேபாசிட்டி வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம். அதேபோல பிரீமியம் லுக் மற்றும் பீச்சர்களும் வருகின்றன.


Click it and Unblock the Notifications








