அம்புட்டு Earbuds-ம் ஓரம்போ.. இவ்ளோ கம்மி விலைக்கு 50 மணிநேர பேட்டரி, 46dB ஹைபிரிட் ANC, IPX5 ரேட்டிங்-ஆ!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆன ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) வருகிற 2025 ஜூலை 8 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆடியோ சந்தையில் ஒன்பிளஸ்-ன் முக்கிய போட்டியாளர் ஆக பார்க்கப்படும் போட் (boAt) நிறுவனம் ஆனது சைலன்ட் ஆக ஒரு புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
அது போட் ஏர்டோப்ஸ் ப்ரைம் 701 ஏஎன்சி (boAt Airdopes Prime 701 ANC) மாடல் ஆகும். போட் நிறுவனத்தின் கூற்றுப்படி இதுவரை தனது பிராண்டிங்கின் கீழ் வெளியான வயர்லெஸ் இயர்பட்ஸ்களிலேயே இதுதான் மோஸ்ட் பீச்சர் ரிச் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (Most feature-rich true wireless earbuds) ஆகும். அப்படி என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலை? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:

போட் ஏர்டோப்ஸ் ப்ரைம் 701 ஏஎன்சி விரிவான அம்சங்கள்: போட் நிறுவனத்தின் புதிய போட் ஏர்டோப்ஸ் ப்ரைம் 701 ஏஎன்சி இயர்பட்ஸ் ஆனது தினசரி பயன்பாடு, கேமிங் மற்றும் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒலி தரம் மற்றும் காதோடு பொருந்தும் வசதி ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன.
போட் ஏர்டோப்ஸ் ப்ரைம் 701 ஏஎன்சி ஆனது 46dB ஹைப்ரிட் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் அம்சத்தை கொண்டுள்ளது, இது வழக்கமான ஏஎன்சி மாடல்களை விட 40% சிறப்பாக பின்னணி இரைச்சலை தடுக்கிறது. மேலும் இது அனைத்து டிவைஸ்களிலும் தெளிவான மற்றும் அதிவேக ஒலிக்கான ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் 24-பிட் பிளேபேக்கையும் ஆதரிக்கிறது.
மேலும் போட் ஏர்டோப்ஸ் ப்ரைம் 701 ஏஎன்சி இயர்பட்ஸ்-ல் உங்கள் ஹியரிங் ப்ரொபைலின் (Hearing Profile) அடிப்படையில் ஆடியோவை சரிசெய்யும் மிமி-வார்டு அடாப்டிவ் ஈக்யூ-வும் உள்ளது. கால்களின் போது தெளிவான குரல் தரத்தை வழங்க, இதில் உள்ள ஏஐ இஎன்எக்ஸ் (AI ENx) தொழில்நுட்பம் ஆனது வெளிப்புற இரைச்சலை பில்டர் செய்கிறது. இந்த தொழில்நுட்பம் இந்திய சூழல்களில் இருந்து 1,000 மணி நேரத்திற்கும் மேலான தரவுகளின் கீழ் பயிற்சி பெற்றுள்ளது.
இந்த இயர்பட்ஸ்-ல் உள்ள 10மிமீ டைனமிக் டிரைவர்கள் ஆழமான பாஸ் மற்றும் தெளிவான மிட் மற்றும் ஹைஸுடன் போட் நிறுவனத்தின் சிக்னேச்சர் சவுண்ட்-ஐ வழங்குகின்றன. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஆட்டோ ப்ளே மற்றும் பாஸ் செய்வதற்கான ஸ்மார்ட் இன்-இயர் டிடெக்ஷன், ஐபிஎக்ஸ்5 (IPX5) ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் மற்றும் டிவைஸ்களுக்கு இடையில் மாறுவதற்கான மல்டிபாயிண்ட் கனெக்டிவிட்டி ஆகியவைகளை கூறலாம்.

கேமர்களுக்கான ஸ்பெஷல் அம்சங்களை பொறுத்தவரை இதன் கீழ் 60ms லோ-லேட்டன்சி ஆடியோவை பெற இதிலுள்ள பீஸ்ட் (BEAST) மோட்-ஐ பயன்படுத்தலாம், இது கேம்ப்ளே அல்லது ஸ்ட்ரீமிங்கின் போது தாமதத்தை குறைக்கிறது. இந்த இயர்பட்ஸ்-ன் ஏஎன்சி (ANC), இக்யூ (EQ) செட்டிங்ஸ் மற்றும் ஃபார்ம்வேர் அப்டேட்களை கண்ட்ரோல் செய்ய இதை போட் ஹியரபில்ஸ் (boAt Hearables) ஆப் உடன் இணைக்கலாம்.
மொத்த பேட்டரியை பொறுத்தவரை போட் ஏர்டோப்ஸ் ப்ரைம் 701 ஏஎன்சி ஆனது 50 மணிநேரம் வரை நீடிக்கும். இந்த இயர்பட்ஸ் 500+ சார்ஜிங் சுழற்சிகளுக்கு மேல் சோதிக்கப்பட்டு உள்ளதாகவும் போட் நிறுவனம் கூறியுள்ளது. ASAPTM சார்ஜ் மூலம் 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் இது 180 நிமிட பிளேபேக்கை வழங்குகிறது.
போட் ஏர்டோப்ஸ் ப்ரைம் 701 ஏஎன்சி விலை நிர்ணயம் மற்றும் விற்பனை விவரங்கள்: போட் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆனது ஜிங்க் ஒயிட், அப்சிடியன் கிரே மற்றும் டைட்டானியம் ப்ளூ ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், போட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








