Home
Gadgets

ஆர்டர் பறக்குது.. ரூ.999 விலை.. டெட்பூல் மற்றும் வுல்வரீன் ஸ்பெஷல் எடிஷன் Earbuds.. எந்த பிராண்ட் தெரியுமா?

போட் ஏர்டோப்ஸ் ஆல்பா டெட்பூல் எடிஷன் இயர்பட்ஸ் (BoAt Airdopes Alpha Deadpool Edition Earbuds) சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டெட்பூல் மற்றும் வுல்வரீன் (Deadpool & Wolverine) திரைப்படத்தின் வெளியீட் சிறப்பிக்கும் வகையில், போட் (BoAt) நிறுவனம் தற்போது இந்த திரைப்படத்தின் தீமில் இயர்பட்ஸ் சாதனத்தை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் இயர்பட்ஸ் (Special edition earbuds) ஆக இருந்தாலும், குறைந்த விலையில் வந்துள்ளதால் மக்கள் இதனை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள மார்வெல் ஆர்வலர்களை குறிவைப்பது போல் தோன்றுகிறது. இந்த சிறப்பு பதிப்பு இயர்பட்களின் விலை, வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் இதோ. போட் ஏர்டோப்ஸ் ஆல்பா டெட்பூல் எடிஷன் இயர்பட்ஸ் (boAt Airdopes Alpha Deadpool Edition Earbuds) விலை பற்றி பேசுகையில், இந்த புதிய BoAt Airdopes Alpha Deadpool பதிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.999 விலைக்கு வகை கிடைக்கிறது.

ஆர்டர் பறக்குது.. ரூ.999 விலை.. டெட்பூல் மற்றும் வுல்வரீன் Earbuds..

போட் ஏர்டோப்ஸ் ஆல்பா டெட்பூல் எடிஷன் இயர்பட்ஸ் (BoAt Airdopes Alpha Deadpool Edition Earbuds):

இதே மாடல் ஆனால் டெட்பூல் தீம் இல்லாத ஏர்டோப்ஸ் ஆல்பா 2023 விலை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெறும் ரூ.799 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய போட் ஏர்டோப்ஸ் ஆல்பா டெட்பூல் எடிஷன், டெட்பூல் மற்றும் வால்வரின் முன்பக்கமும், பின்புறம் டெட்பூல் ஆகியவற்றின் படங்களையும் கொண்ட சிறப்பான வடிவமைக்கப்பட்ட பாக்ஸுடன் வருகிறது.

இந்த புதிய இயர்பட்ஸ்கள் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத் தழுவி வருகிறது. இதில் ஒரு இயர்பட்டில் டெட்பூலின் லோகோவும் மற்றொன்றில் போட் பிராண்டிங்கும் உள்ளன. சார்ஜிங் கேஸில் மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் டெட்பூல் பிராண்டிங் ஆகியவையும் உள்ளது. இந்த சிறப்பு எடிஷன் இயர்பட்ஸ் தெளிவான ஆடியோ மற்றும் சக்திவாய்ந்த பாஸ் வழங்கும் 13mm டிரைவர்களுடன் வெளிவந்துள்ளது.

வாய்ஸ் கால் அழைப்பின் தரத்தை மேம்படுத்த ENx தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது. புளூடூத் v5.3 இணைப்பு தடையில்லாமல் இணைவதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் இது டச் கண்ட்ரோல் வசதியை சேர்க்கின்றன. BoAt Airdopes Alpha Deadpool Edition ஒருமுறை சார்ஜ் செய்தால் 35 மணிநேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

போட் ஏர்டோப்ஸ் ஆல்பா டெட்பூல் எடிஷன் இயர்பட்ஸ் விலை (BoAt Airdopes Alpha Deadpool Edition Earbuds Price):

அனைத்து விவரங்களும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த இயர்பட்கள் வேகமான சார்ஜிங், கேமிங்கிற்கான 50ms லோ-லேடன்சி அம்சத்துடன் கூடிய பீஸ்ட் மோட் போன்ற ஸ்பெஷல் அம்சங்களையும் கொண்டுள்ளது. இது நிலையான ஏர்டோப்ஸ் ஆல்பா மாடலைப் போலவே IPX5 ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெட்பூல் மற்றும் வுல்வரீன் ரசிகர்களுக்கு இந்த சாதனம் ஒரு கலெக்டபிள் டிவைஸாக அமைகிறது. வெறும் ரூ.999 செலவில் இப்படி ஒரு ஸ்பெஷல் எடிஷன் இயர்பட்ஸ் சாதனம் கிடைக்கிறது என்றால், யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். அடுத்து நடைபெறவிருக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது இது இன்னும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் என்பதனால் குறைந்த யூனிட்கள் மட்டுமே விற்பனையாகும் என்ற கருத்தும் நிலவுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes Alpha Deadpool Edition launched under Rs 999 price in India availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X