Home
Gadgets

அமேசான் அதிரும்.. ரூ.1,199 பட்ஜெட்ல ENx டெக்னாலஜி.. BEAST மோட்.. ASAP சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் அதிரும் பட்ஜெட்டில் ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி கொண்ட டூயல் மைக், லோவ் லேட்டன்சி, ஃபாஸ்ட் சார்ஜிங்,குயிக் பேரிங் சப்போர்ட், IPX4 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்களுடன் போட் ஏர்டோப்ஸ் 91 (boAt Airdopes 91) இயர்பட்ஸ் விற்பனைக்கு வரவிருக்கிறது.

போட் ஏர்டோப்ஸ் 91 அம்சங்கள் (boAt Airdopes 91 Specifications): இந்த போட் ஏர்டோப்ஸ் வேரியண்ட்டில் 10 மிமீ டிரைவர்கள் (Drivers) வருகின்றன. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. அதோடு ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (ENx Technology) கொண்ட டூயல் மைக் (Dual Mic) கொண்டுள்ளது.

 பட்ஜெட்ல ENx டெக்னாலஜி.. BEAST மோட்.. ASAP சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆகவே, இந்த வேரியண்ட்டில் வாய்ஸ் காலிங் (Voice Calling) குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக இருக்கும். அதுமட்டுமல்லாமல், பெஸ்ட் சவுண்ட் குவாலிட்டிக்காக (Sound Quality) போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) டெக்னாலஜி இந்த ஏர்டோப் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மியூசிக் அனுபவத்தையும் பக்கா பிரீமியமாக எதிர்பார்க்க முடியும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் 91 வேரியண்ட்டில் கேமிங் பிரியர்களுக்கான பக்கா பீச்சர்களும் இடம்பெற்று இருக்கின்றன. பீஸ்ட் மோட் (BEAST Mode) என்னும் 50எம்எஸ் லோவ் லேட்டன்சி (Low Latency) சப்போர்ட் வருகிறது. இதன் மூலம் ஆடியோ வீடியோ சிங்க் (Audio Video Sync) மிரளவிடும்படி இருக்கும். அதோடு இன்ஸ்டா வேக் பேர் (Insta Wake Pair) சப்போர்ட் உள்ளது.

ஆகவே, ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், டேப்லெட், லேப்டாப் போன்ற மல்டிபிள் டிவைஸ்களில் நொடியில் பேர் செய்து கொள்ளலாம். இந்த போட் ஏர்டோப்ஸ் 91 வேரியண்ட்டில் IPX4 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Splash Sweat Resistance) வருகிறது. ஏஎஸ்ஏபி ஃபாஸ்ட் சார்ஜிங் (ASAP Fast Charging) சப்போர்ட் வருகிறது.

அதோடு கேஸில் 300mAh பேட்டரி மற்றும் இயர்பட்களில் தலா 35mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி கனெக்டர் (Type C Connector) வருகிறது. இந்த ஏஎஸ்ஏபி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து 120 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம்.

அதேபோல ஃபுல் சார்ஜ் செய்துகொண்டால், தொடர்ந்து 45 மணி நேரங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த போட் ஏர்டோப்ஸ் 91 மாடலுக்கு 1 வருட வாரண்டி (Warranty) வழங்கப்படுகிறது. ஆக்டிவ் பிளாக் (Active Black), ஸ்டார்ரி ப்ளூ (Starry Blue) மற்றும் மிஸ்ட் கிரே (Mist Grey) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த போட் ஏர்டோப்ஸ் 91 வேரியண்ட்டில் விலை ரூ.1,199ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவெறும் அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விலை அதிகரிக்கலாம். இந்த ஏர்டோப்ஸ் அமேசான் (Amazon) மற்றும் போட் வெப்சைட் (boAt Website) ஆகிய தளங்களில் விற்பனை வர இருக்கிறது.

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளாம். மிகவும் மலிவான விலைக்கு ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி, லோவ் லேட்டன்சி மோட், இன்ஸ்டா பேர், ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், பக்கா பேக்கப் கொண்ட பேட்டரி போன்ற அம்சங்கள் வேண்டுமானால், போட் ஏர்டோப்ஸ் 91 வேரியண்ட்டை ஆப்சனில் எடுத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes 91 With 300mAh Battery, ENx Technology Sale From February 1 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X