Home
Gadgets

மே 17 காலி.. வெறும் ரூ.1799 போதும்.. டால்பி ஆடியோ.. டச் கன்ட்ரோல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இயர்பட்ஸ் பிரியர்கள் அறக்க பறக்கும் பட்ஜெட்டில் டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், டைட்டானியம் டிரைவர்கள், சிக்னேச்சர் சவுண்ட் டெக்னாலஜி, குவாட் மைக், டச் கன்ட்ரோல் போன்ற ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் போட் ஏர்டோப்ஸ் 800 (boAt Airdopes 800) மாடல் வெளியாகி இருக்கிறது.

இந்த பட்ஜெட் செக்மெண்டிலும் ஏஎஸ்ஏபி சார்ஜிங், லோவ் லேட்டன்சி மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொண்ட இயர்பட்ஸ் மாடலாக இது இருக்கிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் 800 மாடலின் முழு அம்சங்கள் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மே 17 காலி.. வெறும் ரூ.1799 போதும்.. டால்பி ஆடியோ.. டச் கன்ட்ரோல்!

போட் ஏர்டோப்ஸ் 800 அம்சங்கள் (boAt Airdopes 800 Specifications): இந்த மாடலில் 10 மிமீ டைட்டானியம் டிரைவர்கள் (Titanium Drivers) வருகின்றன. பிரீமியம் லுக்கில் மேட் பினிஷிங் (Matte Finishing) கொண்ட இன்-இயர் டிசைன் (in-ear design) வருகிறது. நான்கு கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆகவே, இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), இன்டர்ஸ்டெல்லர் ஒயிட் (Interstellar White), இன்டர்ஸ்டெல்லர் கிரீன் (Interstellar Green) மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் (Interstellar Black) கலர்கள் வருகின்றன. இந்த போட் ஏர்டோப்ஸ் 800 மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த பட்ஜெட்டிலும் போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) சப்போர்ட் மட்டுமல்லாமல் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஆடியோ அனுபவம் பிரீமியம் குவாலிட்டியில் எதிர்பார்க்கலாம். அதேபோல ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (ENx Technology) கொண்ட குவாட் மைக் (Quad mic) வருகிறது.

ஆகவே, வாய்ஸ் கால் அனுபவமும் நாய்ஸ்லெஸ் அவுட்புட் கொடுக்கும். இந்த போட் ஏர்டோப்ஸ் 800 மாடலின் வால்யூம் மற்றும் ஆன்/ஆப் கன்ட்ரோல்களுக்கு டச் கன்ட்ரோல் (Touch Controls) வருகிறது. அதுமட்டுமல்லாமல், இன்-இயர் டிடெக்சன் (In-ear detection) சப்போர்ட் வருகிறது. 50ms லோவ் லேட்டன்சி (Low latency) வருகிறது.

பீஸ்ட் மோடில் (BEAST Mode) இதை பயன்படுத்தலாம். போட் இயரபிள் ஆப் (boAt Hearable App) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அடாப்டிவ் ஈகியூ மோட்களை (Adaptive EQ Modes) பயன்படுத்தலாம். இந்த மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice assistant support) வருகிறது.

ஒரே நேரத்தில் மொபைல், லேப்டாப் போன்ற மல்டி டிவைஸ்களில் கனெக்ட் செய்ய ஏதுவாக மல்டிபாய்ட் கனெக்டிவிட்டி (Multipoint connectivity) வருகிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் 800 மாடலில் ஏஎஸ்ஏபி ஃபாஸ்ட் சார்ஜிங் (ASAP fast charging) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C) சப்போர்ட் கொண்ட பேட்டரி வருகிறது.

வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், போதும் தொடர்ந்து 100 நிமிடங்களுக்கு பிளேபேக் டைம் கிடைக்கும். அதேபோல ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 40 மணி நேரங்களுக்கு பிளேபேக் டைம் கொடுக்கும். இந்த போட் ஏர்டோப்ஸ் 800 மாடலுக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த மாடலின் விலை ரூ.1799ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் மே 17ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மற்றும் மிட்-ரேஞ்ச் அம்சங்கள் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இது நல்ல தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes 800 With Quad Mic, Dolby Audio Sale From May 17 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X