போட் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஏர்டோப்ஸ் 701 மாடல்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

|

போட் நிறுவனம் தனது புதிய ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய சாதனம். அதேசமயம் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம்.

ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த அசத்தலான ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

மாடலை அமேசான் இந்தியா மற்றும் போட் வலைத்தளங்கள் மூலம் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் முழு அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போட் ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்

குறிப்பாக போட் ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது மற்ற சாதனங்களுடன் இணைய 15m வரம்பிலான 5.0 ப்ளூடூத் இணைப்புடன் வருகிறது. மேலும் ஆக்டிவ் பிளாக் நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய சாதனம்.

அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம்.!அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம்.!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

இந்த ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, லேப்டாப், மியூசிக் பிளேயர் மற்றும் பிற ப்ளூடூத்-க்கு இணக்கமான சாதனங்களுடன் கூட இனைக்க முடியும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 சாதனம் 9 மிமீ டிரைவர்களைக்

அதபோல் இந்த புதிய சாதனம் 9 மிமீ டிரைவர்களைக் கொண்டுள்ளன. மிகவும் எளிமையான வடிவமைப்பு மற்றும் டச் கட்டுப்பாடுகள் மூலம் தடையற்ற பயனர் அனுபவத்தை உறுதி செய்கிறது போட் ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்

701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் ஏ.என்.சி மோட், சுற்றுப்புற ஒலிக்கான கிரிஸ்டல் மோட் வசதிகள் இருப்பதால் சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். பின்பு கேமிங் அனுபவத்திற்காக பீஸ்ட் மோட் உள்ளிட்ட பல மோட்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன. வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபிஎக்ஸ் 7 சான்றிதழ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல். மேலும் இதன் கேஸ் 550 எம்ஏஎச் பேட்டரி யூனிட் உடன் வருகிறது. பின்பு ஒவ்வொரு பட்டிலும் 50 எம்ஏஎச் பேட்டரி உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் விலை ரூ.3,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட் நிறுவனம் புதிய

மேலும் இந்த போட் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. போட் எக்ஸ்ப்ளோரரில் உள்ளமைக்கப்பட்ட நேரடி வானிலை முன்னறிவுப்புகள் மற்றும் அடுத்த 3 நாட்கள் வானிலை முன்னறிவுப்புகளை வழங்கும் வசதியோடு இது வருகிறது. போட் எக்ஸ்ப்ளோரர் சாதனத்தின் அறிமுக விலை குறித்து பார்க்கையில் இது ரூ.2,999 என இருக்கும் எனவும் 1 ஆண்டு நிலையான தொழில் உத்தரவாதத்துடன் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இது தங்களது செயலின் வாழ்க்கை முறையை உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் 24x7 இதய துடிப்பு டிராக்கர் உடன் தினசரி செயல்பாட்டு டிராக்கரும் ஜோடியாக பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்சானது நடைபயிற்சி அல்லது சைக்கிளிங்

இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது நடைபயிற்சி அல்லது சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சி செய்யும் போது உங்களது வழிகளையும் செல்லும் தூரத்தையும் கண்காணிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி போட் எக்ஸ்ப்ளோரர் சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதி கொண்டிருக்கிறது. இந்த உள்ளமைக்கப்பட்ட ஸ்மார்ட் டிராக்கர் செயல்பாட்டு வசதி மூலம் தங்களது கலோரி எரிப்பு, ஸ்டெப்ஸ் மற்றும் தூரங்களை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி வெளிப்புற ஒட்டம், உட்புற ஓட்டம், வெளிப்புற நடை, வெளிப்புற சைக்கிளிங், உட்புற சைக்கிளிங், ஸ்விமிங் பூல் நீச்சல் மற்றும் உடற்தகுதி உள்ளிட்ட 8 உடற்பயிற்சி பயன்பாட்டு முறைகளை இது கொண்டுள்ளது.

போட் எக்ஸ்ப்ளோரர் உள்ளமைக்கப்பட்ட

அதுமட்டுமின்றி போட் எக்ஸ்ப்ளோரர் உள்ளமைக்கப்பட்ட நேரடி வானிலை முன்னறிவிப்புகள் மிகவும் சிறந்ததாக இருக்கிறது. இது தற்போதைய வானிலை நிலவரத்தை தெரிவிப்பதோடு, அடுத்த 3 நாட்களுக்கான புதுப்பிப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் ஆகியவற்றை இதில் பெறலாம். வெளிப்புற செயல்களை மேற்கொள்ளும்போது இதன்மூலம் நீங்கள் இயற்கை சூழலை அறிந்துக் கொள்ளளாம். இந்த வாட்ச்சில் தனிப்பயனாக்கப்பட்ட கிளவுட் வாட்ச் முகங்களும் இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BoAt Airdopes 701 true wireless earbuds Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X