இந்தியா: மலிவு விலையில் தரமான போட் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.!
இந்தியாவில் மின்சாதன அக்சஸரீ பிராண்டான போட் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான வடிவமைப்பு நல்ல அம்சங்களுடன் வெளிவருகிறது என்று தான் கூறவேண்டும்.

ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்
இந்நிலையில் போட் நிறுவனம் தனது புதிய ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பின்பு இந்த சாதனம் அசத்தலான வடிவமைப்புடன் சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

150 மணி நேர பேக்கப்
குறிப்பாக ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது 150 மணி நேர பேக்கப், ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த புதிய ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலில் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க சவுண்ட், 6எம்எம் டிரைவர்கள் உள்ளன. பின்பு இந்த சாதனம் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனத்தின் மிக முக்கியமான அம்சமாக அதன் பேட்டரி பேக்கப் உள்ளது.

ஏர்டோப்ஸ் 621 மாடல் விலை
இந்தியாவில் போட் ஏர்டோப்ஸ் 621 மாடல் ஆனது ரூ. 2999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த சாதனம் அமேசான் தளத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட் ஸ்மார்ட் வாட்ச்
இதற்குமுன்பு போட் நிறுவனம் பிளாஷ் எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ மற்றும் விவிட் ரெட் போன்ற நிறங்களில் இந்த போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.2,499-ஆக உள்ளது. குறிப்பாக அமேசான் வலைத்தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை வாங்க முடியும்.

குறிப்பாக இந்த பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மெல்லிய மெட்டாலிக் டிஸ்ப்ளே, டூயல் டோன் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தில் உள்ள சென்சார்கள் பிட்னஸ் டிராக்கிங் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது. பின்பு பல்வேறு சென்சார் வசதிகள் இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இது தவிர 10 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் இந்த பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் உள்ளன.

இந்த புதிய பிளாஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது மியூசிக் கண்ட்ரோல் வசதி, வாட்ச் கேமரா மற்றும் நோட்டிபிகேஷன் ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு 200 எம்ஏஎச் பேட்டரி வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு தேவையான ஸ்டான்ட்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications