பட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.!

|

மிகவும் பிரபலமான ஆடியோ பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போட் அதன் ஏர்டோபஸ் 461 டி.டபிள்யூ.எஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சாதனம் அசத்தலான வடிவமைப்புடன் சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.!

போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் ஆனது அக்டோபர் 16-ம் தேதி முதல் boAt.in வலைத்தளத்திலும் பிளிப்கார்ட்டிலும் அறிமுக விலையான ரூ.2999 க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் ஆக்டிவ் பிளாக் மற்றும் போல்ட் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் ஆனது சமீபத்திய ஐ.டபிள்யூ.பி தொழில்நுட்பத்தையும், 2 நாட்கள் வரை நீண்ட பிளேபேக் நேரத்தின் சக்தியையும் கொண்டுள்ளது. பின்பு ASAP ஃபாஸ்ட் சார்ஜ், கிரிஸ்டல் மோட் மற்றும் பீஸ்ட் மோட் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.!

போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் மாடலில் உள்ள கிரஸ்டல் மோட் உங்களை Ambient Sound Ready ஆக இருக்க அனுமதிக்கிறது, எனவே உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் இயற்பட்ஸை அகற்ற வேண்டியதில்லை. சுருக்கமாக கிரிஸ்டல் மோட் உங்களை சுற்றியுள்ள ஒலிகளைக் கேட்க உதவும் வண்ணம் டூயல் மைக்குகளை மாற்றுகிறது.

மேலும் போட் நிறுவனத்தின் BEAST மோட் ஆனது கேமர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கேமிங் செய்யும் போது நிகழ்நேர ஆடியோவிற்கான லோ லேடன்சியை உறுதி செய்யும். ஒவ்வொரு இயர்பட்ஸும் 60 எம்ஏஎச் லிபோ பேட்டரியைக் கொண்டுள்ளது, இது சிங்கிள் சார்ஜில் 6 மணிநேர தொடர்ச்சியான பிளேபேக்கை வழங்குகிறது. சார்ஜிங்-கம்-கேரி கேஸின் உள்ளமைக்கப்பட்ட 600 எம்ஏஎச் லிபோ பேட்டரி கூடுதல் 40 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது, இது நீண்ட பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.

பட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.!

இந்த சாதனத்தில் உள்ள சார்ஜிங் கேஸில் IWP மற்றும் ASAP ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பமும் உள்ளன. ASAP ஃபாஸ்ட் சார்ஜ் மூலம், boAt Airdopes 461 TWS earbuds ஆனது 60 நிமிடங்களுக்கான பிளேபேக் நேரத்தை வெறும் 5 நிமிட சார்ஜ் மூலம் பெறும்.

குறிப்பாக கேஸின் மூடியைத் திறந்தவுடன் உடனடியாக வேக் அப் (பவர் ஆன்) ஆக மற்றும் இயர்பட்ஸ் உடன் இணைக்க, இதன் ஐ.டபிள்யூ.பி தொழில்நுட்பம் உதவும். மேலும் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் V5.0 ஆல் இயக்கப்படுகிறது, இது வேகமான இணைப்பு மற்றும் 10 மீட்டர் வரை சிறந்த வரம்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயர்பட்ஸ் மாடல்கள் ஒரு சக்திவாய்ந்த டைனமிக் 6மிமீ ட்ரைவரை கொண்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் டூயல் மைக்ரோபோன்களை விட சிறந்தவையாகும் மற்றும் அழைப்புகளின் போது மிகச் சிறந்த குரல் தரத்தையும் உறுதி செய்கின்றன. அதே நேரத்தில் சுற்றுப்புற சத்தங்களை குறைக்கவும் உதவுகின்றன.

இந்த BoAt Airdopes 461 TWS Earbuds ஒவ்வொன்றும் வெறும் 5.07 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும் மென்மையான டச் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. இது பேளேபேக்கை கண்ட்ரோல் செய்யவும், ஹேண்ட்ஸ் ஃப்ரீயாக பயன்படுத்தவும் அல்லது வாய்ஸ் அசிஸ்டென்ட்களை செயல்படுத்தவும் மிகவும் வசதியானது.

பட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.!

போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் மாடல் ஐபிஎக்ஸ் 5 உடன் மதிப்பிடப்பட்டுள்ளது, இது தூசி மற்றும் தண்ணீரிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் இந்த சாதனம் அலெக்சா, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உடன் இணக்கமானது என்பது

குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Boat Airdopes 461 TWS Earbuds Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X