Home
Gadgets

பாக்கெட்டுல தூக்கி போடுவீங்க.. ரூ.999க்கு கேமிங் இயர்பட்ஸ்.. லோவ் லேட்டன்சி மோட் வேற.. எந்த மாடல்?

மலிவான விலையில், 380mAh பேட்டரி, ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி, லோவ் லேட்டன்சி மோட், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் போட் (boAt) நிறுவனத்தின் போட் ஏர்டோப்ஸ் 161 ப்ரோ (boAt Airdopes 161 Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

இப்போது மார்க்கெட்டில் வரும் இயர்பட்ஸ்களில் புதுப்புது அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. அதில், லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) மற்றும் ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (ENx Technology) அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், லோவ் லேட்டன்சி மோட் கேமிங் விளையாடும்போதும், வீடியோக்களை பார்க்கும் போதும் ஆடியோ வீடியோ சின்க் கன கச்சிதமாக இருக்க பயன்படுத்தப்படுகிறது.

பாக்கெட்டுல தூக்கி போடுவீங்க! ரூ.999க்கு கேமிங் இயர்பட்ஸ்! எந்த மாடல்?

அதேபோல ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி காலிங் அனுபவத்தை கிரிஸ்டல் கிளியராக மாற்றுகிறது. ஆகவே, இந்த அம்சங்களையே இயர்பட்ஸ் பிரியர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால், இந்த அம்சங்களோடு வரும் இயர்பட்ஸ்களின் விலை குறைந்தது ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இருப்பினும், போட் நிறுவனம் அறிமுக சலுகையாக வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் போட் ஏர்டோப்ஸ் 161 ப்ரோ இயர்பட்ஸை களமிறக்கியிருக்கிறது.

போட் ஏர்டோப்ஸ் 161 ப்ரோ அம்சங்கள் (boAt Airdopes 161 Pro Specifications): இந்த போட் இயர்பட்ஸ் 10 மிமீ டிரைவர்கள் கொண்டுள்ளது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

டச் கன்ட்ரோல் (Touch Controls) கொடுக்கப்பட்டுள்ளது. ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (ENx Technology) கொண்ட டூயல் மைக் (Dual Mic) வருகிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் 161 ப்ரோ இயர்பட்ஸ் 380mAh பேட்டரி கொண்டுள்ளது. அதோடு ஒவ்வொரு இயர்பட்டிலும் தலா 35mAh பேட்டரி இருக்கிறது.

இந்த பேட்டரி தொடர்ந்து 50 மணி நேரம் பிளேபேக் கொடுக்கும். டைப் - சி சார்ஜிங் கேபிள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏஎஸ்ஏபி (ASAP) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. இந்த சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 150 நிடமிடங்கள் பயன்படுத்தலாம்.

கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் வகையில், 60ms பீஸ்ட் மோட் (BEAST Mode) எனப்படும் லோவ் லேட்டன்சி (Low Latency) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. IPX5 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஒரு வாரண்ட்டி இருக்கிறது. இந்த போட் இயர்பட்ஸ் ஸ்லீக் பிளாக் (Sleek Black), செலிஸ்டியல் ப்ளூ (Celestial Blue) மர்றும் க்ரீன் சியன் (Green Cyan) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆர்டர் செய்துகொள்ளலாம். போட் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும். இந்த இயர்பட்ஸின் விலை ரூ.999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை என்பதால் விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி பேக்கப் மற்றும் லோவ் லேட்டன்சி மோட் வேண்டுமென்றால், இந்த இயர்பட்ஸ் நல்ல தேர்வாக இருக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes 161 Pro Earbuds Launched With 50h Playback ENx Technology Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X