Home
Gadgets

இப்படி ஒரு கம்மி விலையில் ட்ரூலி இயர்பட்ஸ் வாங்க முடியுமா? சாத்தியமாக்கிய BoAt நிறுவனம்!

புதிய TWS போட் ஏர்டோப்ஸ் 131 என்ற இயர்பட்ஸ் சாதனம் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான BoAt Airdopes 131 இயர்பட்ஸ் நாளை முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை நம்பமுடியாத வகையில் மிகவும் மலிவாக அமைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

boAt Airdopes 131

A2DP ஆதரவோடு, சிறந்த வேகமான இணைப்பிற்காக boAt Airdopes 131 புளூடூத் v5.0 ஆல் இயக்கப்படுகிறது. சிறந்த அதிவேக ஆடியோ அனுபவத்திற்காக ஏர்டோப்ஸ் 131 சாதனத்தில் 13 மிமீ ஆடியோ டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. BoAt Airdopes 131 இன் சார்ஜிங் கேஸில் IWP (Instant Wake N 'Pair) தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஆக்டிவ் பிளாக், மிட்நைட் ப்ளூ மற்றும் செர்ரி ப்ளாசம் வண்ணங்களில் வருகின்றது.

நீண்ட பேட்டரி

இது தன்னிச்சையாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் நீங்கள் சார்ஜிங் கேஸின் மூடியைத் திறக்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனுடன் உடனடியாக இணைகிறது. இயர்பட்ஸ்கள் காதில் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய வசதியான பொருத்தத்துடன் நேர்த்தியான மற்றும் பிரீமியம் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இயர்பட்ஸ்கள் ஒவ்வொன்றும் வெறும் 3.5 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. ​​15 மணிநேரத்திற்கு செயல்படும் நீண்ட பேட்டரி ஆயுளுடன் வருகிறது.

 40 எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரி

ஒவ்வொரு இயர்பட்ஸ் கருவியில் 40 எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஒரே சார்ஜிங்கில் 3 மணி நேரம் இடைவிடாது இசையை அனுபவிக்க அனுமதி வழங்குகிறது. சார்ஜிங் கேஸில் 650 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது கூடுதலாக நான்கு முறை சார்ஜிங் செய்ய அனுமதிக்கிறது. இதில் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1,299 என்ற விலை

புதிய TWS போட் ஏர்டோப்ஸ் 131 இயர்பட்ஸ் சாதனம் ஆகஸ்ட் 22ம் தேதி 12 மணி முதல் பிளிப்கார்ட் தலத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. போட் என்ற இந்த அருமையான பிராண்டில் இருந்து வெறும் ரூ.1,299 என்ற விலையில் கிடைக்கும் இந்த போட் ஏர்டோப்ஸ் 131 இயர்பட்ஸ் உண்மையில் ஒரு நல்ல சாய்ஸ். மலிவு விலையில் ட்ரூலி இயர்பட்ஸ் வாங்க நினைப்பவர்கள் இந்த போட் ஏர்டோப்ஸ் 131 இயர்பட்ஸ் சாதனத்தைக் கருத்தில்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BoAt Airdopes 131 Earbuds Will Be Available On Flipkart Starting 22nd August : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X