Home
Gadgets

ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.899 போதும்.. 40 ஹவர் பேக்கப்.. குவாட் மைக்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ரூ.1,000 பட்ஜெட்டை விட கம்மியான விலையில் பிரீமியம் டிசைன், டச் கன்ட்ரோல், குவாட் மைக், லோவ் லேட்டன்சி மோட், ஏஎஸ்ஏபி சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் போட் ஏர்டோப்ஸ் 120 (boAt Airdopes 120) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ரூ.2,500 மதிப்புள்ள இயர்பட்களில் கிடைத்து வந்த பீச்சர்கள் இப்போது ரூ.1,000 பட்ஜெட்டில் வெளியாகும் மாடல்களிலேயே வருகிறது. இதனால், எந்த பட்ஸ் வாங்குவது என்ற குழப்பமும் கஸ்டமர்களிடையே ஏற்படுகிறது. இருப்பினும், பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற பீச்சர்களை பார்த்து வாங்கி கொள்ளலாம்.

ரூ.899 போதும்.. 40 ஹவர் பேக்கப்.. குவாட் மைக்.. ஃபாஸ்ட் சார்ஜிங்!

இதுபோன்ற பீச்சர்களை போட் (boAt) நிறுவனம், தனது மலிவு விலை இயர்பட்ஸ்களிலேயே கொடுத்து வருகிறது. அந்த வரிசையில், போட் ஏர்டோப்ஸ் 120 இயர்பட்ஸ் மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டா வேக் என் ஃபேர், பீஸ்ட் மோட் போன்ற பிரத்யேக பீச்சர்களிலும் பின்னியெடுக்கிறது. இப்போது, முழு அம்சங்களை தெரிந்து கொள்வோம்.

போட் ஏர்டோப்ஸ் 120 அம்சங்கள் (boAt Airdopes 120 Specifications): இந்த போட் மாடலில் 10எம்எம் டிரைவர்கள் (10mm Drivers) வருகின்றன. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, ஆடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக இருக்கும். அதேபோல வாய்ஸ் கால்களுக்கும் ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (ENx Technology) வருகிறது. அதோடு குவாட் மைக் (Quad mic) கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோவை போலவே வாய்ஸ் கால்களிலும் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட்டை எதிர்பார்க்கலாம்.

ரூ.899 போதும்.. 40 ஹவர் பேக்கப்.. குவாட் மைக்.. ஃபாஸ்ட் சார்ஜிங்!

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டிலும் டச் கன்ட்ரோல் (Touch Control) மற்றும் இன்-இயர் டிடெக்சன் (In-ear Detection) சப்போர்ட் வருகிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் 120 மாடலில் ஏஎஸ்ஏபி பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (ASAP fast charging support) வருகிறது. ஆகவே, 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 60 நிமிடங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

இந்த பேட்டரிக்கு டைப்-சி கனெக்டர் (Type-C connector) வருகிறது. இதை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 40 மணி நேரங்களுக்கு பிளே பேக் டைம் (playback time) கொடுக்கும். இந்த மாடலில் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக 65ms லோவ் லேட்டன்சி (Low latency) கொண்ட பீஸ்ட் மோட் (BEAST Mode) வருகிறது.

இந்த மோட் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ சிங்க் லேட்டன்சி இல்லாமல், பட்டையை கிளப்பும். அதேபோல இன்ஸ்டா வேக் என்'பேர் (Insta Wake N'Pair) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் நொடியில் கனெக்ட் செய்து கொள்ள இன்ஸ்டா பேர் சப்போர்ட் உதவியாக இருக்கும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் 120 மாடலில் IPX4 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் (Splash & Sweat Resistance) வருகிறது. பிரீமியம் டிசைனில் டவுன் ப்ளூ (Dawn Blue), ஐவோரி ஒயிட் (Ivory White) மற்றும் ஆக்டிவ் பிளாக் (Active Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இவ்வளவு பீச்சர்களை கொண்ட இந்த போட் ஏர்டோப்ஸ் 120 மாடலின் விலை வெறும் ரூ.899 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த மாடலை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து வங்கி கொள்ளலாம். மிகவும் கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் லுக், பக்கா பீச்சர்கள் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes 120 With Touch Control Under Rs 1000 Sale From March 23 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X