Home
Gadgets

boAt அறிமுகம் செய்த புதிய சவுண்ட்பார்.. டால்பி அட்மாஸ்.. 4,500mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

போட் நிறுவனம் தனது புதிய போட் அவான்டே பிரைம் எக்ஸ் வயர்லெஸ் சவுண்ட்பார் (boAt Aavante Prime X soundbar) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சவுண்டபார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போட் Aavante Prime X வயர்லெஸ் சவுண்ட்பார் அம்சங்கள் (boAt Aavante Prime X soundbar specifications): இந்த புதிய சவுண்டபார் மாடல் ஆனது டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 7.1.4-சேனல் சரவுண்ட் சவுண்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த சவுண்ட்பார் மற்ற சாதனங்களை விட தனித்துவமான ஆடியோ வழங்கும்.

boAt அறிமுகம் செய்த புதிய சவுண்ட்பார்.. டால்பி அட்மாஸ்..எந்த மாடல்?

பல திசைகளில் ஒலியை (multi-directional audio) வழங்கும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக போட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஹார்டுவேர் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த அமைப்பில் 8-இன்ச் சப்வூஃபர் டிரைவர், சவுண்ட்பார் மற்றும் சேட்டிலைட் ஸ்பீக்கர்களில் (satellite speakers) பல 2.25-இன்ச் டிரைவர்கள் உள்ளன. இது 20Hz முதல் 20kHz வரையிலான ஃப்ரெக்வன்சி ரெஸ்பான்ஸ் வரம்பை ஆதரிக்கிறது. இவை அனைத்தும் இணைந்து அதிகபட்சமாக 700W அவுட்புட்டை வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது.

விளையாட்டு, திரைப்படங்கள், இசை மற்றும் கேமிங் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்க வகைகளுக்காகப் பிரத்யேக மோட்களை (modes) வழங்குகிறது போட் Aavante Prime X வயர்லெஸ் சவுண்ட்பார். வயர்லெஸ் சேட்டிலைட் ஸ்பீக்கர்கள் சவுண்ட்பாரில் இருந்து காந்தம் மூலம் கழற்றப்பட்டு, அறையின் எந்தப் பகுதியிலும் வைக்கலாம்.

குறிப்பாக வயர்லெஸ் சேட்டிலைட் ஸ்பீக்கர்கள் 4,500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றன. இவை HDMI வழியாக டால்பி அட்மாஸ் உடன் 12 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது. ப்ளூடூத் 5.3, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஆப்டிகல் இன்புட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

boAt அறிமுகம் செய்த புதிய சவுண்ட்பார்.. டால்பி அட்மாஸ்..எந்த மாடல்?

போட் Aavante Prime X வயர்லெஸ் சவுண்ட்பார் விலை ரூ.39,999-ஆக உள்ளது. ஆனால் இதன் ஆரம்ப சலுகையாக ரூ.37,999 விலையில் வாங்க முடியும். பிளிப்கார்ட், அமேசான் மற்றும் போட் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் (boAt CineHead M1 Projector) விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (boAt CineHead M1 Projector Specifications): 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல். எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும்.

200 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (ANSI lumens brightness) கொண்டுள்ளது இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல். இந்த ப்ரொஜெக்டர் மூலம் 30 இன்ச் முதல் 150 இன்ச் வரை புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 12 (Android 12) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது.

boAt அறிமுகம் செய்த புதிய சவுண்ட்பார்.. டால்பி அட்மாஸ்..எந்த மாடல்?

பிலட்-இன் ஆப் ஸ்டோர் (built-in app store) ஆதரவும் உள்ளது. பயனர்கள் இதில் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் யூடியூப் போன்ற பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட், ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus), அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் (Adjustable Stand) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட், ப்ளூடூத், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போட் சினிஹெட் எம்1 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் ப்ரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர லேம்ப் லைஃப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போட் ப்ரொஜெக்டர் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
boAt Aavante Prime X soundbar launched in India: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X