ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.9,249 போதும்.. 32 இன்ச் QLED டிவி.. சரவுண்ட் சவுண்ட்.. 38 சதவீத ஆஃபரில் டிவி!
ஹாலுக்கு டிவி வாங்கும்போது, பெட்ரூமுக்கு ஒன்று வாங்கினால் நல்லா இருக்குமே என்று தோன்றுவது இயல்புதான். ஆனால், பெரும்பாலும் வாங்க மாட்டோம். இருப்பினும், ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் லினக்ஸ் டிவி (Blaupunkt Sigma QLED 32 inch Linux TV) மாடலுக்கு கிடைக்கும் தள்ளுபடியை பார்த்தால், வாங்கிவிட வாய்ப்புள்ளது.
38 சதவீத தள்ளுபடி விலைக்கு ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Blaupunkt Sigma QLED 32 inch HD Ready LED Smart Linux TV) மாடலானது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் நேரடியாக ரூ.9,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பேடிஎம் கஸ்டமர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் லினக்ஸ் டிவி அம்சங்கள் (Blaupunkt Sigma QLED 32 inch Linux TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுத்துள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட மாடலாக இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் லினக்ஸ் டிவி இருக்கிறது.
மேலும், ஹை-பிரைட்னஸ், விவிட் கலர்கள், பெட்டர் கான்ட்ராஸ்டு உள்ளிட்டவை அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. கியூஎல்இடி டெக்னாலஜி (QLED Technology) பயன்படுத்தப்பட்டு உள்ளது. டைனாமிக் கிரிஸ்டல் கலர் (Dynamic Crystal Color) கிடைக்கிறது. 100 சதவீத கலர் வால்யூம் கிடைக்கிறது. ஆகவே, கலர் டெப்த் மற்றும் நேச்சுலர் அவுட்புட்டை எதிர்பார்க்க முடியும்.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆகவே, 36W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொடுத்துள்ளது. மேலும், சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும், ஹை குவாலிட்டி ஆடியோவை எதிர்பார்க்கலாம்.
லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) கிடைக்கிறது. இருப்பினும், 5000+ ஆப் சப்போர்ட் கொடுத்துள்ளது. ஆகவே, அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஆப்கள் கிடைக்கின்றன. ஆம்லாஜிக் குவாட் கோர் ப்ராசஸர் (AMLOGIC Quad Core Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரியை இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொடுத்து இருக்கிறது. பில்ட்-இன் வை-பை (Built in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டியை கொடுத்து இருக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
மேலும், ஆடியோ ஜாக், எல்ஏஎன் போர்ட் கொண்ட மாடலாக இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் லினக்ஸ் டிவி இருக்கிறது. 32சிக்மாகியூ010 (32SigmaQ010) மாடல் மற்றும் சிக்மா கியூஎல்இடி (Sigma QLED) சீரிஸ் கீழ் இந்த டிவியை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளாக் கலரில் கிடைக்கிறது. 1 வருட வாரண்டியில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications