ரூ.6,999-விலையில் புதிய HD ஸ்மார்ட் டிவியை இறக்கிவிட்ட பிரபல நிறுவனம்: முழு விவரம்.!
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக சில நிறுவனங்கள் அனைத்து சிறப்பு அம்சங்களுடனும் கம்மி விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபலமான Blaupunkt நிறுவனம் இந்தியாவில் கம்மி விலையில் 24-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை மாணிட்டர், டிவி மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் போன்று பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Blaupunkt சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்
Blaupunkt நிறுவனம் கடந்த ஆண்டு அதிகமாக QLED டிவிக்களை அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் எச்டி ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள Blaupunkt சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது வியூவிங் அனுபவம், பிரத்தியேக பரிந்துரை மற்றும் தரமான ஆடியோ வசதியுடன் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த Blaupunkt சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால், சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி ஆனது surround சவுண்ட் தொழில்நுட்ப ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு இந்த இந்த டிவி கீழ் பகுதியில் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான சிப்செட்
குறிப்பாக இந்த Blaupunkt சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் A35 x 4 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் 300 நிட்ஸ் பிரைட்னஸ், டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர், ஏ பிளஸ் பேனல் உள்ளது. குறிப்பாக 32-இன்ச் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது Blaupunkt சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவி.

அதேபோல் Blaupunkt சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Blaupunkt நிறுவனம்.
Blaupunkt சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவியின் ரிமோட்டில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, வூட் மற்றும் சோனிலிவ் போன்ற சேவைகளுக்கான ஹாட்கீ உள்ளது. குறிப்பாக ஓடிடி-இல் வெளியாகும் திரைப்படங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் தெளிவாகப் பார்க்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி Linux இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

என்ன விலை?
மேலும் இந்த புதிய சிக்மா 24 இன்ச் ஸ்மார்ட் டிவியில் வைஃபை ஆதரவு,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. பின்பு இப்போது அறிமுகம் செய்யப்பட்ட Blaupunkt சிக்மா 24 இன்ச் 3-இன்-1 ஸ்மார்ட் டிவியின் உண்மை விலை ரூ.10,999-ஆகும். ஆனால் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை அறிமுக சலுகையாக இந்த டிவியை ரூ.6,999-விலையில் வாங்க முடியும்


Click it and Unblock the Notifications








