அட்ராசக்கை.! இனி உங்க ஏரியாவே அதிரப்போகுது.! கம்மி விலையில் இப்படி ஒரு Blaupunkt ஸ்பீக்கர்-ஆ.!

|

தியேட்டரில் படம் பார்ப்பது போல நல்ல தரமான ஆடியோ அனுபவத்துடன் உங்கள் வீட்டிலேயே திரைடபங்களை பார்க்க வேண்டுமா? அப்போ, இந்த ப்ளூபங்க்ட் (Blaupunkt) சவுண்ட் பார் சாதனத்தை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.

குறைந்த விலையில் மிரட்டலான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் தேவையை இந்த சவுண்ட் பார் தரமாக நிறைவேற்றுகிறது. உங்கள் வீட்டிலும் ஒரு சவுண்ட் பார் அல்லது லவுட் ஸ்பீக்கர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த டிவைஸை நழுவவிடாதீர்கள்.

அட்ராசக்கை.! இனி உங்க ஏரியாவே அதிரப்போகுது.! கம்மி விலையில் ஸ்பீக்கர்!

Blaupunkt நிறுவனம் இந்தியாவில் இதற்கு முன் பல ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்திருக்கும் புதிய சாதனம் தான் இந்த Blaupunkt SBW250 Soundbar எனப்படும் சாதனம். இந்த புதிய சவுண்ட்பாரை நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 200W சவுண்ட் அவுட் உடன் சப்-வூஃபர் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.

சரி, இப்போது இந்த சவுண்ட் பாரின் விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கிறது? இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற விஷயங்களை இப்போது தெளிவாக பார்க்கலாம். ப்ளூபங்க்ட் SBW250 சவுண்ட்பார் சாதனம் இந்தியாவில் வெறும் ரூ.8,499 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

இந்த Blaupunkt SBW250 Soundbar இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய வலைத்தளம் மற்றும் அமேசான் (Amazon) இந்தியா வழியாக வாங்கக் கிடைக்கிறது. இப்படி ஒரு மலிவான விலையில் இந்த Blaupunkt SBW250 Soundbar சாதனம் ஒரு சப்-வூஃப்பர் மற்றும் சவுண்ட் பார் சாதனங்களை சேர்த்து காம்போவாக வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த விலையில் சவுண்ட் பார் மட்டும் கிடைப்பது இயல்பு.

ஆனால், சப்-வூஃப்பர் பாக்ஸுடன் ஒரு சாதனம் கிடைப்பது அரிதானது. இந்த சாதனம் 8 இன்சஸ் அளவு கொண்ட காஸ்ட்டிங்கிற்குள் வைக்கப்பட்டுள்ளது. வைப்ரேஷனை குறைந்து மிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை இந்த டிவைஸ் வழங்குகிறது. இந்த Blaupunkt SBW250 Soundbar சாதனம் 200W சவுண்ட் அவுட்புட்டை வழங்குகிறது.

இசை மற்றும் மியூசிக் இரண்டுமே மிகவும் துல்லியமான தரத்தில் பிளே செய்யப்படுகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இதில் உங்களுக்கு க்ளியர் ஆடியோ மற்றும் என்ஹான்ஸ்ட் செய்யப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் அம்சமும் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த சவுண்ட் பாரில் உள்ள மிக முக்கியமான சிறப்பம்சமே இதில் வழங்கப்பட்டுள்ள 3D சரவுண்ட் சவுண்ட் அம்சம் தான்.

இந்த சவுண்ட் பார் சாதனம் கரோக்கே மற்றும் கிட்டார் இன்புட் போர்ட் அம்சத்துடன் வருகிறது. கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இந்த Blaupunkt SBW250 Soundbar சாதனம் ஆனது HDMI ARC, optical, AUX, line-in மற்றும் ப்ளூடூத் ஆதரவுடன் வருகிறது. இது தவிர இந்த ஆடியோ டிவைஸ் 3 EQ மோட், மல்டிபிள் மியூசிக் மோட், சோனி மோட், சினிமா டயலாக் மோட் மற்றும் 3D ஆடியோ மோட் போன்ற பல பிரத்தியேக மோட்களில் சிறப்பாகச் செயல்படுகிறது.

இந்த Blaupunkt SBW250 Soundbar டிவைஸுடன் வரும் சவுண்ட் பார் மற்றும் சப்-வூஃப்பர் பாக்ஸை கட்டுப்படுத்த உதவும் ரிமோட் உடன் இந்த டிவைஸ் வருகிறது. இந்த ரிமோட் பிரத்தியேகமான சில கீஸ்-களுடன் play, pause, bass என்ற வழக்கமான ஆடியோ கண்ட்ரோல் கீஸ்-களையும் கொண்டுள்ளது. ரூ. 8,000 விலை வரம்பில் 3D சரவுண்ட் சவுண்ட் அம்சத்துடன் கிடைக்கும் ஸ்பீக்கரை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?

Best Mobiles in India

English summary
Blaupunkt SBW250 Soundbar Launched In India Know Price, Specs and Sale Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X