சும்மா கிழியுது.. வெறும் ரூ.4499 போதும்.. 100W சவுண்ட்பார்.. டீப் பேஸ் ஆடியோ.. சப்வூப்பர் வருது.. எந்த மாடல்?
100W ஆடியோ அவுட்புட் கொடுக்கும் சவுண்ட்பார் மாடல், சப்வூப்பருடன் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் வெறும் ரூ.5000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு விற்பனைக்கு வந்தால் சொல்லவா வேண்டும்? டக்குனு ஆர்டர் போட வேண்டியதுதான் என்று சொல்லும்படி ப்ளூபங்க்ட் எஸ்பிடபுள்யூ100 ப்ரோ பிளஸ் (Blaupunkt SBW100 Pro Plus) சவுண்ட்பார் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.
ரிமோட் கன்ட்ரோல், சவுண்ட் மோட்கள், மல்டி கனெக்டிவிட்டி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் வெளியாகிய இந்த ப்ளூபங்க்ட் எஸ்பிடபுள்யூ100 ப்ரோ பிளஸ் மாடலின் முழு விவரங்களை பார்த்துவிட்டு பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதை தெரிந்து கொள்வோம். கிட்டத்தட்ட ஹோம் தியேட்டர் செட்டப்பில் கிடைக்கும் அவுட்புட் இப்போது மார்கெட்டில் கிடைக்கும் சவுண்ட்பார்களிலேயே வருகின்றன.

ஒரே சவுண்ட்பாரில் பல ஸ்பீக்கர்கள் மற்றும் கூடுதலாக ஒரு சப்வூப்பரும் கிடைத்தால் போதும், அதில் ஹோம் தியேட்டரைவிட ஆடியோ அவுட்புட் அதிகமாக எதிர்பார்க்க முடிகிறது. சொல்லப்போனால், 100W ஆடியோ அவுட்புட் கூட வெறும் ரூ.5000 பட்ஜெட் கொண்ட சவுண்ட்பார்களில் இப்போது கிடைக்கிறது. இந்த வரிசையில், ப்ளூபங்க்ட் எஸ்பிடபுள்யூ100 ப்ரோ பிளஸ் ஆடியோ பிரியர்களை தட்டித் தூக்கி இருக்கிறது.
ஹோம் தியேட்டர் அவுட் கொடுக்க மூவிஸ் மோட் (Movies Mode), மியூசிக் மோட் (Music Mode), நியூஸ் மோட்(News Mode) போன்ற ஈகியூ மோட்கள் (EQ Modes) இந்த சவுண்ட்பாரில் கிடைக்கிறது. ஹை-டெபனிஷன் மற்றும் 2.1 சேனல் சப்போர்ட் கொண்ட 2 டிரைவர்கள் இருக்கின்றன. இந்த சவுண்ட்பாருடன் ஒரு சப்வூப்பரும் வருவதால், பேஸ் எஃபெக்ட் விரும்பிகளுக்கு இது பெஸ்ட் அவுட் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ப்ளூபங்க்ட் எஸ்பிடபுள்யூ100 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Blaupunkt SBW100 Pro Plus Specifications): பிளாக் கலரில் பிரீமியம் மேட் பாடி டிசைனில் சவுண்ட் பார் மற்றும் சப்வூப்பர் கிடைக்கிறது. சவுண்ட் பாரில் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) இருக்கின்றன. 2.1 சேனல் அவுட்புட் சப்வூப்பரில் எதிர்பார்க்கலாம். இந்த சப்வூப்பருக்கு வயர்டு கனெக்டிவிட்டி (Wired Connectivity) மட்டுமே கிடைக்கிறது.
அடிமட்ட பட்ஜெட்டில் கிடைப்பதால், வயர்லெஸ் (Wireless) எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, ப்ளூடூத் சப்போர்ட் கொண்ட மல்டி ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த கனெக்டிவிட்டிக்கு பிறகு எச்டிஎம்ஐ ஏஆர்சி (HDMI ARC) போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் (USB) போர்ட் சப்போர்ட் உள்ளது.
மேலும், ஆடியோ அவுட் கொடுக்க ஏயுஎக்ஸ் (AUX) இருக்கிறது. இன்-பில்ட் மற்றும் ரிமோட் கன்ட்ரோல்கள் கிடைக்கிறது. ஆகவே, ரிமோட் கூடுதலாக பெற்று கொள்ளலாம். இந்த ரிமோட் மூலம் ஈகியூ மோட்களை மாற்றி கொள்ளலாம். சவுண்ட் பாரில் கன்ட்ரோல் பேனல் (Control Panel) மூலம் வால்யூம் மற்றும் பவர் ஆன்/ஆஃப் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன.
இந்த ப்ளூபங்க்ட் எஸ்பிடபுள்யூ100 ப்ரோ பிளஸ் மாடலுக்கு ஒரு வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.4,499 விலையில் களமிறங்கி இருக்கிறது. இந்திய மார்கெட்டில் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல ப்ளூபங்க்ட் (Blaupunkt) தளத்திலும் ஆர்டர் செய்து கொள்ள கிடைக்கிறது.
இந்த விலை அறிமுக சலுகையாகும். ஆகவே, விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. 5.1 சேனல் சப்போர்ட் வேண்டாம், ஆடியோ அவுட்புட் அதிகமாக வேண்டும். கூடவே, பேஸ் அவுட்புட் கொடுக்க சப்வூப்பர் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ளூபங்க்ட் எஸ்பிடபுள்யூ100 ப்ரோ பிளஸ் சவுண்ட்பார் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








