ஆளுக்கு 2 TV ஆர்டர்.. 29 தள்ளுபடியில் 43 இன்ச் QLED டிவி.. டால்பி அட்மோஸ் ஆடியோ.. HDR 10 வீடியோ.. எந்த மாடல்?
பிளாபங்க்ட் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவிகள் கம்மியான விலைக்கு அறிமுகமாகி வருவதால், இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் 43 இன்ச் கியூஎல்இடி டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக விற்பனைக்கு வந்துள்ளது. 29 தள்ளுபடியில் பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி 2025 எடிஷன் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீத தள்ளுபடியுடன் ரூ.20,499 விலைக்கு பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி 2025 எடிஷன் (Blaupunkt Quantum Dot 43 inch QLED 4K Google TV 2025 Edition) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலையில் இந்த கியூஎல்இடி டிவி கிடைக்கிறது.

பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Blaupunkt Quantum Dot 43 inch QLED TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் டிவி கொண்டுள்ளது. மேலும், 400 நிட்ஸ் பிரைட்னஸ், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், ஏஐ ஸ்மூத் மோஷன் ரேட் (AI Smooth Motion Rate), எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் டபுள்யூசிஜி (WCG) கொடுத்துள்ளது.
50 W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speaker) கிடைக்கின்றன. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) கிடைத்துள்ளது. ஸ்டான்டர்டு (Standard), மியூசிக் (Music), நியூஸ் (News), மூவி (Movie), கேம் (Game) மற்றும் யூசர் (User) ஆகிய சவுண்ட் மோட்களை இந்த பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது.
மேலும், ஏஐ பியூ சிப்செட் (AI PQ Chipset) கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ55 4 (ARM Cortex A55 4) ப்ராசஸர் கிடைத்துள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கொடுக்கப்பட்டுள்ளது.
பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) ஓடிடி ஆப்களை கொண்டுள்ளது. மேலும், கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், ஒகே கூகுள் (Ok Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆக்டிவ் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஹாட் கீகள் கிடைக்கும். இன்-பில்ட் வை-பை (in-built Wi-Fi) கிடைத்துள்ளது.
மேலும், ப்ளூடூத் மற்றும் வயர்லெஸ் மிரரிங் கனெக்டிவிட்டிகளை இந்த பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைத்துள்ளது. எல்ஏஎன் (LAN), ஆடியோ / வீடியோ மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டிகளையும் கொடுத்துள்ளது.
43QC7005 மாடல் மற்றும் குவாண்டம் டாட் (Quantum Dot) சீரிஸ் கீழ் இந்த பிளாபங்க்ட் குவாண்டம் டாட் 43 இன்ச் கியூஎல்இடி டிவி வாங்க கிடைக்கிறது. பிளாக் கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். கூகுள் டிவி 2025 எடிஷனாக இருக்கிறது. 1 வருட வாரண்டி கொடுத்துள்ளது. வைடு விஷன் ஸ்கிரீன் (Wide-vision Screen) மற்றும் டேபிள் மவுண்ட் டிசைன் கிடைக்கிறது. வால்-மவுண்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








