Home
Gadgets

வாங்குனா இந்த டிவி வாங்கனும்.. 75 இன்ச் டிஸ்பிளே.. 108W ஸ்பீக்கர்.. கூகுள் TV OS.. மினி LED டிவி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 75 இன்ச் டிவி வாங்க வேண்டுமானால், இதைத்தான் வாங்கனும் என்று அடித்து சொல்லும்படியான பட்ஜெட்டில் 75 இன்ச் டிஸ்பிளே, 108W ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஓஎஸ், டால்பி அட்மோஸ், 2 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ப்ளூபங்க்ட் க்யூடி மினி எல்இடி டிவி (Blaupunkt QD Mini LED TV) வெளியாகி இருக்கிறது. இந்த க்யூடி மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கிட்டத்தட்ட ஹோம் தியேட்டருக்கு நிகரான டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களை கொடுக்கிறது. ஏனென்றால், பிரேம்லெஸ் டிசைனுடன் (Frameless Design) டால்பி விஷன் (Dolby Vision), ஏஐ ஸ்மூத் மோஷன் (AI Smooth Motions), ஏஐ கலர் என்ஹான்ஸ் (AI Colour Enhance), எச்டிஆர்10 (HDR10) மட்டுமல்லாமல், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது.

வாங்குனா இந்த டிவி வாங்கனும்.. 75 இன்ச் டிஸ்பிளே.. 108W ஸ்பீக்கர்!

அதேபோல 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 வூப்பர்கள் கிடைக்கின்றன. ஆகவே, பிரீமியம் வீடியோ அவுட்புட் கிடைக்கும். ஆடியோவில் கூடுதலாக ஹோம் தியேட்டர் இல்லாமலேயே அந்த அனுபவம் கிடைக்கிறது. இதேபோல மற்ற பீச்சர்களிலும் இந்த ப்ளூபங்க்ட் க்யூடி மினி எல்இடி டிவி மிரளவிட்டிருக்கிறது. முக்கிய பீச்சர்களை பார்க்கலாம்.

ப்ளூபங்க்ட் க்யூடி மினி எல்இடி டிவி அம்சங்கள் (Blaupunkt QD Mini LED TV Specifications): இந்த ப்ளூபங்க்ட் டிவியில் 65 இன்ச் மற்றும் 75 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 4K ரெசொலூஷன் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. இதுபோக ஃபிரேம்லெஸ் டிசைன் கிடைக்கிறது.

ஆகவே, பிரீமியம் அனுபவம் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், எச்டிஆர்10, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கும் ஏற்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே எம்இஎம்சி (MEMC), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் விஆர்ஆர் (VRR) கிடைக்கிறது.

இதுபோக ஏஐ சூப்பிரியர் கிளாரிட்டி (AI Superior Clarity), ஏஐ ரீபைன்டு கான்ட்ராஸ்டு (AI Refined Contrasr), ஏஐ ஸ்மூத் மோஷன் மற்றும் ஏஐ கலர் என்ஹான்ஸ் போன்ற ஏஐ பீச்சர்களை பேக் செய்துள்ளது. அதேபோல டைனாமிக் பேக்லைட் (Dynamic Backlight) மற்றும் எச்எல்ஜி (HLG) கிடைக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக டிஸ்பிளே பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

இந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு நிகரான அவுட்புட் கொடுக்கும்படி ஆடியோ பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, 108W சவுண்ட் அவுட்புட் கொடுக்கிறது. ஆகவே, இந்த டிவிக்கு ஹோம் தியேட்டர்கள் தேவைப்படாது. ஏனென்றால், மொத்தமாக 6 யூனிட் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் 4 ட்வீடர்கள் (Tweeters) மற்றும் 2 வூப்பர்கள் (Woofers) இருக்கின்றன.

இந்த ப்ளூபங்க்ட் க்யூடி மினி எல்இடி டிவியின் ஆடியோ பீச்சர்களை பார்க்கையில், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) கிடைக்கிறது. மொத்தமாக இந்த ஆடியோவுக்கு 180 டிகிரி சவுண்ட் பீல்டு கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க குவாட் கோர் மீடியாடெக் (Quad Core MediaTek) சிப்செட் கிடைக்கிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) கிடைப்பதால், கூகுள் அசிஸ்டன்ட், பிளே ஸ்டோர், குரோம்காஸ்ட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் இருக்கின்றன. 65 இன்ச் மாடலின் விலை ரூ.94,999ஆகவும், 75 இன்ச் மாடலின் விலை ரூ.1,49,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் புக்கிங் செய்யலாம். ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt QD Mini LED TV With 108W Audio Launched India Sale From August 28 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X