Flipkart-ல் செம்ம டிமாண்ட்.. ரூ.10,000 பட்ஜெட்டில் பரபரப்பாக அறிமுகமான ஸ்மார்ட் TV.. ரூமுக்கு 1 வாங்கலாம் போல!
பட்ஜெட் விலையில் நல்ல-நல்ல ஸ்மார்ட் டிவிகளை தேடும் இந்தியர்களை குறிவைத்து ப்ளூபங்க்ட (Blaupunkt) நிறுவனமானது 6 புதிய ஸ்மார்ட் டிவிகளை (Smart TV) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவைகளில் வெறும் ரூ.10,888 க்கு வாங்க கிடைக்கும் மாடலானது பலரது கவனத்தையும் ஈர்க்கும்படி உள்ளது.
பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் (Flipkart Big Saving Days) போது வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ப்ளூபங்க்டடின் 6 புதிய ஸ்மார்ட் டிவிகளின் டிஸ்பிளே அளவு என்ன? விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இதோ விவரங்கள்:

ப்ளூபங்க்கின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவிகளானது எச்டி (HD), ஃபுல் எச்டி (FHD), 4கே (4K), க்யூஎல்இடி (QLED) என 4 வெவ்வேறு ரெசல்யூஷன்களில், 6 வெவ்வேறு டிஸ்பிளே அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 32-இன்ச் மாடலானது எச்டி டிஸ்பிளேவையும், 43-இன்ச் மற்றும் 40-இன்ச் மாடலானது ஃபுல்எச்டி டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது.
மேற்கண்ட 3 மாடல்களுமே, ப்ளூபங்க்கின் சைபர்சவுண்ட் ரியல்டெக் ஜென் 2 (Cybersound Realtek Gen 2) மாடல்கள் ஆகும். இவைகள் முறையே ரூ.10,888, ரூ.16,499 மற்றும் ரூ.18,499 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. இந்த 3 டிவிகளுமே மேம்பட்ட ஸ்பீக்கர் தொழில்நுட்பத்தை பேக் செய்கின்றன மற்றும் பில்ட்-இன் நெட்ஃபிக்ஸ் மற்றும் இரண்டு 48W பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன.
இந்த 3 டிவிகளில் சரவுண்ட் சவுண்ட் (Surround sound) வசதியும் உள்ளது. மேலும் இந்த மாடல்கள் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜையும் கொண்டுள்ளன. இது மென்மையான செயல்திறன், ஆப்ஸ் மற்றும் கன்டென்ட்டிற்கான போதுமான ஸ்டோரேஜை உறுதி செய்கிறது.
பெசல்-லெஸ் டிஸைனுடன் வரும் இந்த டிவிகள் ஆண்ட்ராய்டு 11 ஆப்ரேட்டிங் சிஷ்டமுடன் வருகின்றன. லேப்டாப்கள், மொபைல் மற்றும் பிசிக்களுடன் ஸ்க்ரீன் ஷேரிங் செய்யும் ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன. அமேசான் வீடியோ, ஜீ5, சோனிலைவ் மற்றும் வூட் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களை அணுகுவதற்கான பிரத்யேக ஷார்ட்கட் கீஸ் உடனான ரிமோட்டையும் கொண்டுள்ளன.
ஒருவேளை நீங்கள் பெரிய டிஸ்பிளே மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை விரும்பினால், ப்ளூபங்க்கின் 50-இன்ச் மற்றும் 65-இன்ச் கூகுள் டிவி மாடல்களை அல்லது 75-இன்ச் க்யூஎல்இடி டிவியை கருத்தில் கொள்ளலாம். இந்த மூன்று டிவிகளுமே முறையே ரூ.28,999, ரூ.44,444 மற்றும் ரூ.99,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.
50-இன்ச் மற்றும் 65-இன்ச் கூகுள் டிவிகளின் அம்சங்களை பொறுத்தவரை, இரண்டுமே 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன. மேலும் இரண்டுமே எம்டி9062 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன. மேம்பட்ட ஒலியை வழங்குவதற்காக டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) தொழில்நுட்பத்துடனான இரண்டு 60W டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்ககளை கொண்டுள்ளன.
மேலும் இந்த டிவிகள் பெஸல்-லெஸ் மற்றும் ஏர்-ஸ்லிம் டிஸைன் (Air-slim design), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வைஃபை கனெக்டிவிட்டி (Wi-Fi connectivity), வாய்ஸ்-எனேபிள்ட்டு ரிமோட் மற்றும் பல்வேறு டிவைஸ்களுடனான தடையற்ற இணைப்புகளுக்காக 3 எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் 2 யூஎஸ்பி (USB) போர்ட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன.
கடைசியாக உள்ள 75-இன்ச் டிவியானது,1.1 பில்லியன் வண்ணங்களின் வரம்பை வழங்கும் க்யூஎல்இடி 4கே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 4 பில்ட்-இன் ஸ்பீக்கர்களுடன் 60W டால்பி ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கரை கொண்டுள்ளது. தவிர எச்டிஆர் 10+, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் உள்ளிட்ட மேம்பட்ட ஆடியோ தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications