Home
Gadgets

ஆஃபரை அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. HDR10.. டால்பி அட்மாஸ்.. 50 இன்ச் டிவி வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் கோட் சேல் 2025 (Flipkart GOAT Sale 2025) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் ப்ளூபங்க்ட் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் கோட் விற்பனையில் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Blaupunkt Cybersound 50 inch Ultra HD 4K Smart Android TV) மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும் எனவே இந்த டிவியை தள்ளுபடி ரூ.20499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆஃபரை அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. 50 இன்ச் டிவி வாங்க சரியான நேரம்..

ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Blaupunkt CyberSound 50 inch 4K TV Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் குவாட் கோர் (QUAD Core) பிராசஸர் உடன் இந்த அசத்தலான 50 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மாலி ஜி52 எம்சி1 ஜிபியு(Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே (Ultra HD 4K) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவு, 500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி பெரிய மற்றும் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் டிவி வருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 10 (Android TV 10) மூலம் இந்த டிவி இயங்குகிறது. பின்பு கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம் காஸ்ட் (Chromecast), ஏர்பிளே (AirPlay) போன்றவற்றையும் இதில் பயன்படுத்தலாம்.

குறிப்பாக யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

அதுவும் 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port) மற்றும் ஆடியோ ஜாக் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான டிவி. இதுதவிர ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.

தரமான டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 60W ஸ்பீக்கர்கள் இந்த ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். மேலும் ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music), மூவிஸ் (Movie), ஸ்போர்ட்ஸ் (Sports) போன்ற ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt Cybersound 50 inch 4K Smart TV is available discounted price at Flipkart GOAT Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X